பாஜக விலகியதால் நிம்மதியாக இருக்கிறது அதிமுக - சி.வி.சண்முகம் ஏற்படுத்திய சலசலப்பு
ஒரு வார காலமாக அதிமுக நிம்மதியாக இருக்கிறது என்று சொல்லி பாஜகவிற்குள் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம்.
விழுப்புரம் அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் .அப்போது பேசிய அவர்,
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடுவதால் அதிமுக விற்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவித்த அவர், ஒரு வார காலமாக நிம்மதியாக இருக்கிறோம் என்று தெரிவித்தார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியிலிருந்து பாஜக விலகியதால் அதிமுகவினர் நிம்மதியாக இருப்பதாக அவர் தெரிவித்ததையடுத்து அங்கிருந்தோர் கைதட்டி ரசித்தனர்.

அதன் பின்னர் அவர் நீட்தேர்வு விவகாரத்தில் திமுகவின் குற்றச்சாட்டுகள் குறித்து பதிலளித்தார். திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் கடந்த 2010-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டது நீட் தேர்வு முறை. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்படவில்லை முழுக்க திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தான் கொண்டு வரப்பட்டது. அப்படி இருக்கும்போது நீட் குறித்து அதிமுக ஆட்சியை குறை சொல்வதற்கு திமுகவுக்கு எந்த தகுதியும் இல்லை என்று சொன்னவர், நீட் மசோதாவை ஆளுநர் இரண்டு காரணங்களைச் சொல்லி தமிழக அரசுக்கு விளக்கம் கேட்டு திருப்பி அனுப்பி இருக்கிறார்.
அவர் எடுத்துக்கொள்ளவில்லை என்று கூறவில்லை. உரிய விளக்கத்தை அளிக்கும் பட்சத்தில் அவர் பெற்றுக்கொண்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்ப போகிறார் என்று தெரிவித்தார்.
ஒரு வார காலமாக அதிமுக நிம்மதியாக இருக்கிறது என்று சொல்லி பாஜகவிற்குள் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.


