அதே நிலைமைக்கு தள்ளப்பட்ட 5 மாநிலங்கள்! பேரணி, பொதுக்கூட்டத்திற்கு தடை நீட்டிப்பு!

 
எ

ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணி நடத்த தலைமை தேர்தல் ஆணையம் கடந்த 8ஆம் தேதி தடை விதித்திருந்தது. இந்த நிலையில் அந்தத் தடை வரும் 31-ஆம் தேதி வரைக்கும் நீட்டித்து அறிவிக்கப்பட்டிருக்கிறது.

உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர் , கோவா ஆகிய 5 மாநிலங்களில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.  இதற்காக கட்சிகள் பரபரப்பில் இருக்கின்றன.

எ

 இதற்கிடையில் ஒமைக்ரான் தொற்று மற்றும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.  இதையடுத்து சட்டமன்ற தேர்தல் நடைபெறும் ஐந்து மாநில சுகாதார செயலாளர்கள்,  மத்திய சுகாதார செயலாளர்களுடன் இந்திய தேர்தல் ஆணையம் இன்று காணொளியில் ஆலோசனை நடத்தியது .

உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் ,கோவா, மணிப்பூர் ,பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் பொதுக்கூட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கிறது.   இந்த கட்டுப்பாடுகள் இன்றுடன் முடிவடையும் நிலையில் இந்த  ஆலோசனை நடத்தப்பட்டது.

பொதுக் கூட்டங்கள் மற்றும் பேரணி நடத்த தடை விதிக்கப் பட்டிருப்பதால் கட்சிகள் சமூக வலைத்தளங்கள் வாயிலாக பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் ஏற்கனவே விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்குவதா? அல்லது தடையை மேலும் நீட்டிப்பதா? என்பது குறித்து என்று ஆலோசனை நடைபெற்றது.

  இந்த நிலையில் இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் பேரணி மற்றும் பொதுக் கூட்டங்களுக்கு வரும் 31-ஆம் தேதி வரை தடை விதிக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் முடிவு எடுத்து அறிவித்தது. ஆக, வரும் 31ம் தேதி வரைக்கும் சமூக வலைத்தளங்கள் வாயிலாகத்தான் கட்சிகள் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்கிற நிலைமை.