40-40 : பிரியங்காவின் கணக்கு

 
pr

உத்தரபிரதேசத்தில் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் மார்ச் 7ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது .   தேதி அறிவிப்பதற்கு முன்னதாகவே பல்வேறு கட்சிகளும் தங்களது பிரச்சாரத்தை ஆரம்பித்திருந்தன.  இந்தநிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் அனைத்து கட்சியினரும் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார்கள்.

p

இந்த நிலையில்,  உத்தரபிரதேச தேர்தலில் போட்டியிடும் 125 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை வெளியிட்டு இருக்கிறார் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி. 

 இதுகுறித்து அவர் தில்லியில் செய்தியாளர்களிடம் பேசியபோது,   தற்போது வெளியிடப்பட்டிருக்கும் 125 வேட்பாளர்களில் 40 சதவிகிதம் பெண்களுக்கும் 40 சதவிகிதம் இளைஞர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.   மாநிலத்தில் ஒரு புதிய வகை அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த திட்டமிட்டிருப்பதாகவும் பிரியங்கா காந்தி தெரிவித்திருக்கிறார்.   அதை கருத்தில் கொண்டுதான் இந்த 40க்கு 40 சதவிகிதம் என்ற கணக்கினையும் திட்டமிட்டு இருக்கிறார் என்றும் அவரது பேச்சில் தெரிகிறது.