ஜெயலலிதா இறப்பதற்கு 4 நாட்களுக்கு முன்பு...மருத்துவர் நரசிம்மன் வாக்குமூலம்

 
ஜய்

ஜெயலலிதா 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி வரைக்கும் நலமுடன் இருந்ததாக அப்பல்லோ மருத்துவர்கள் ஆறுமுகசாமி ஆணையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது.   ஆறுமுக சாமி ஆணையத்தின் விசாரணையில் ஜெயலலிதாவின் உறவினர்கள், பாதுகாவலர்கள், அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் என்று 156க்கும் மேற்பட்டோர் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளனர். 

அ

ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை நிறைவுறும்  நிலையில் இருந்தபோது,  அப்பல்லோ மருத்துவர்களிடம் மறுவிசாரணை செய்ய வேண்டும் என்று அப்பல்லோ தரப்பு கூறியதையடுத்து 9  மருத்துவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.   அதன்படி ஏப்ரல் 5ம் தேதியான நேற்று அப்பல்லோ மருத்துவர்கள் செந்தில்குமார்,  தவபழனி ஆகியோர் ஆறுமுகசாமி ஆணையத்தின் முன்பாக ஆஜராகினர்.

 ஜெயலலிதாவுக்கு சிகிச்சை வழங்கும்போது தனக்கு நன்றி தெரிவித்ததாக எய்ம்ஸ் மருத்துவர் கிலானி அளித்த வாக்குமூலத்தின் படி மருத்துவர் செந்தில் குமாரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.   அந்த கேள்விகளுக்கு பதிலளித்த செந்தில்குமார்,   ஜெயலலிதா சுயநினைவின்றி மருத்துவமனையில் இருந்ததாகவும்,   மருத்துவர் கிலானிக்கு நன்றி தெரிவித்தது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

 இன்று ஏப்ரல் 6-ஆம் தேதியன்று அப்பல்லோ மருத்துவர்கள் நரசிம்மன்,  ரமேஷ் ஆகியோர் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.  அதன்படி இரண்டு பேரும் இன்று மறுவிசாரணைக்காக ஆஜராகி உள்ளனர்.

அப்ப்

 ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் செப்டம்பர் 20ஆம் தேதி,  முப்பதாம் தேதி மற்றும் அக்டோபர் 9ஆம் தேதி ஆகிய தேதிகளில் எக்மோ கருவி பொருத்தப்படுவது தேவையா என்று ஆலோசிக்கப்பட்டதாகவும், அது  தேவையில்லை என்று பின்னர் முடிவு எடுக்கப்பட்டதாகவும் மருத்துவர் பால் ரமேஷ் வாக்குமூலம் அளித்துள்ளார் .

இதையடுத்து மருத்துவ நரசிம்மன்,   2016 ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி வரைக்கும் முதல்வர் ஜெயலலிதா நலமுடன் இருந்தார் என்றும்,  ஜெயலலிதா இறப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு அவரை தான் சந்தித்ததாகவும்,  அப்போது அவர் நலமுடன் இருந்ததாகவும் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.