எடப்பாடிக்கு 60 எம்.எல்.ஏக்கள் ஆதரவு! ஓபிஎஸ்க்கு..?

 
op

சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டுமென்பதில் ஆதரவும் எதிர்ப்பும் அக்கட்சியினரிடையே ஒரு சேர  வலுத்து வருகிறது.  அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தரப்பு சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்று துடிக்க,   இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு அதற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டே இருக்கிறது.

 ஓ. பன்னீர் செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனி மாவட்ட அதிமுகவினர் ஆலோசனை கூட்டம் நடத்தி சசிகலாவை மீண்டும் அதிமுகவில்  சேர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பன்னீர்செல்வத்திடம் தீர்மானம் நிறைவேற்ற கோரிக்கை விடுத்தனர்.    இந்த ஆலோசனை கூட்டமே பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டில்தான் நடந்துள்ளது. 

sa

 இதையடுத்து பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா,   சசிகலாவை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.  அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிரடியாக நுழைந்து விடுங்கள் என்றும் அவர் சசிகலாவுக்கு சாவி கொடுத்துவிட்டு வந்திருக்கிறார்.

 பன்னீர்செல்வம் தரப்பு இப்படி தீவிரமாக களமிறங்கி கொண்டிருக்க,   எடப்பாடி தரப்பு இது குறித்து ஆலோசனை மேற்கொண்டிருக்கிறது.   அப்போது 60 எம்எல்ஏக்கள் எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.   சசிகலாவிற்கு இந்த அறுபது எம்.எல்.ஏக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து பேசி வந்துள்ளனர்.   அதேநேரம் பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு என்று பார்த்தால் 4 எம்எல்ஏக்கள் தான் இருக்கிறார்களாம்