27 அமாவாசை வந்தாலும் அது வராது; 270 அமாவாசை வந்தாலும் அவரால் முடியாது - போட்டுத்தாக்கிய ப.சி.

 
c

இருபத்தி ஏழு அமாவாசை வந்தாலும் தேர்தல் வராது.   270 அமாவாசை வந்தாலும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக முடியாது என்று கடுமையாக சாடினார் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம்.

 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தேவகோட்டை நகராட்சியில் போட்டியிடும் காங்கிரஸ் மற்றும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் பிரச்சாரம் செய்தார்.

op

 பிரச்சாரத்தில் அவர் பேசியபோது,    நடக்கும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நின்றுகொண்டு எடப்பாடி பழனிச்சாமி,  ஓ . பன்னீர்செல்வம் தேர்தல் வாக்குறுதியில் சொன்ன படி திமுக வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று பேசுகின்றார்கள்.  முன்னாள் முதல்வர்கள் மேடைகளில் தேவையில்லாமல் பிதற்றக்கூடாது என்று கண்டித்தார்.

தொடர்ந்து பேசியவர்,   சட்டமன்றத்தை முடக்குவோம் என்று சொல்கிறார்கள்.  சட்டசபையை யாராலும் முடக்க முடியாது.   அரசியல் சாசனப்படி அதுவும் முடியாது. கோர்ட்டு தீர்ப்பு தெளிவாக இருக்கிறது என்றார் அழுத்தமாக.

c

பின்னர் அவர்,   2024 சட்டசபை தேர்தல் வரும் என்றும் இருபத்தி ஏழு அமாவாசையில் தேர்தல் வரும் என்றும் பேசுகின்றார்கள்.  இருபத்தி ஏழு அமாவாசை வந்தாலும் தேர்தல் வராது 270 அமாவாசை வந்தாலும் எடப்பாடி பழனிச்சாமியால் முதல்வராக முடியாது என்று போட்டுத் தாக்கினார்.