227வது முறையாக வேட்புமனு தாக்கல் செய்த தேர்தல் மன்னன்
ஜனாதிபதி தேர்தல் முதல் உள்ளாட்சித் தேர்தல் வரைக்கும் வேட்புமனுவை தாக்கல் செய்து வருவதால் ‘தேர்தல் மன்னன்’ என்றே அழைக்கப்படுகிறார் பத்மராஜன். சேலம் மாவட்டத்தில் மேட்டூர் வீரக்கல் புதூர் பேரூராட்சி இரட்டை புளிய மரத்தை சேர்ந்தவர் பத்மராஜன். 62 வயதான இவர் இதுவரைக்கும் 226 முறை வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார். தற்போது 227 வது முறையாகவும் அவர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார் .
வாஜ்பாய் , நரசிம்மராவ் , ஜெயலலிதா, மோடி என பலருக்கும் எதிராக தேர்தலில் மனு தாக்கல் செய்தவர் பத்மராஜன். தமிழகம் மட்டுமல்லாது புதுச்சேரியில் ஐந்தாவது முறையாக எம்பி தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்தவர் பத்மராஜன் .
நடிகர் சங்க தேர்தலையும் இவர் விட்டுவைக்கவில்லை. தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியவர். இவர் நாடக நடிகர் என்கிற அடிப்படையில் உறுப்பினர் அட்டை இருப்பதால் அந்த அடிப்படையில் நடிகர் சங்கத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
கின்னஸ் சாதனைக்காக இந்த முயற்சியை எடுத்து வருவதாக சொல்லி இருக்கும் தேர்தல் மன்னன் சாதனை லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
நேற்றைய தினம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கவுன்சிலர், பதவிக்கு வேட்பு மனு தாக்கல் துவங்கியதை அடுத்து வீரக்கல் புதூர் பேரூராட்சி இரண்டாவது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட பத்மராஜன் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இதோடு அவர் 227 ஆறாவது முறையாக வேட்புமனு தாக்கல் செய்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.