20- 20 : ராஜேந்திரபாலாஜி பிடிபட்டது இப்படித்தான்

 
ர்ர்

20 நாட்களாக தலைமறைவாக இருந்து வந்த ராஜேந்திரபாலாஜியை 20 கிலோமீட்டர் காரில் விரட்டி சென்று சுற்றிவளைத்து பிடித்துள்ளது தனிப்படை.

 கடந்த அதிமுக ஆட்சியின்போது அப்போதைய பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் அவரது ஆதரவாளர்களும் ஆவின் மற்றும் அரசின் பல்வேறு நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி பல கோடி ரூபாய் மோசடி செய்து விட்டதாக அவர் மீது தொடர்ந்து புகார்கள் கூறப்பட்டு வருகின்றன. 

ப்

 விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் கடந்த மாதம் 18ஆம் தேதி தொடரப்பட்ட வழக்கில் கைதாகாமல் இருக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஜேந்திரபாலாஜி முன்ஜாமீன் கோரியிருந்தார்.   இந்த முன் ஜாமீன் மனு தள்ளுபடியானது .  இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.  இந்த மனு மீது உடனடியாக விசாரணை நடைபெறாத நிலையில் மனு மீது விசாரணை உடனடியாக நடத்த வேண்டும் என்று  கோரிக்கை விடுத்திருந்தார்.  

 இதற்கிடையில் தலைமறைவாக இருக்கும் ராஜேந்திரபாலாஜி பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.  கர்நாடகா, ஆந்திரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் ராஜேந்திரபாலாஜி தங்கியிருப்பதாக போலீசாருக்கு மாறி மாறி தகவல் கிடைத்திருக்கின்றன.  அவர் நட்சத்திர விடுதிகளில் அல்லது ஒரே இடத்தில் தங்கி இருந்தால்தான் போலீசில் சிக்க வேண்டியதிருக்கும் என்பதால் காரிலேயே பெரும்பாலும் வாழ்ந்து வருகிறார்,   கார் விட்டு கார் மாறிமாறி காரில் பயணம் செய்து கொண்டிருக்கிறார் என்று போலீசாருக்கு தகவல் கிடைத்திருக்கிறது.

 இந்த தகவலின்படி போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தார்கள்.  ராஜேந்திரபாலாஜியை இந்த அளவுக்கு தேடியதால் அதிமுக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.  அதே நேரம் அவரை பிடிக்க முடியவில்லை என்று  திமுக கூட்டணியில் இருப்போர் விமர்சித்து  வந்தனர்.

இந்தநிலையில் ராஜேந்திர பாலாஜிக்கு உதவியதாக இரண்டு அதிமுக நிர்வாகிகள் பிடிபட்டு அவரிடமும் அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வந்தது. ராஜேந்திர பாலாஜி பிடித்துவிடுவோம் என்று நெருங்கும் போதெல்லாம் அவர் எஸ்கேப் ஆகிவிடுகிறார்.  அதனால் காவல்துறையிலும் அவருக்கு உதவி செய்யும் கருப்பு ஆடுகள் இருக்கின்றன என்றும் தகவல் வெளியானது.

ர்ப்

 தலைமறைவாக இருக்கும் ராஜேந்திரபாலாஜி வெளிநாடுகளுக்கு தப்பித்து சென்று விடக்கூடாது என்பதற்காக காவல் துறை லுக் அவுட் நோட்டீஸ் வெளியிட்டது.  இடத்து ராஜேந்திர பாலாஜியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. 

 ஒவ்வொருவராக காரைவிட்டு மாறிக்கொண்டு சுற்றிக்கொண்டிருக்கும் ராஜேந்திரபாலாஜி கர்நாடகாவில் இருப்பதாக ரகசியமாக தகவல் கிடைத்திருக்கிறது.  கடந்த 20 நாட்களாக போலீசார் தேடுதல் வேட்டையில் பதுங்கியிருந்த ராஜேந்திரபாலாஜியை போலீசார் சினிமா பாணியில் சென்று மடக்கிப் பிடித்து உள்ளார்கள்.

 கர்நாடகாவில் பதுங்கியிருந்த ராஜேந்திரபாலாஜியை இன்று பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் 20 கிலோ மீட்டர் தூரம் வரைக்கும் காரில் விரட்டிச் சென்று ஹாசன் கலெக்டர் அலுவலகம் முன்பாக சுற்றிவளைத்து இருக்கின்றார்கள் தனிப்படை போலீசார்.

 போலீஸ் வாகனத்தை கண்டதும் காரில் தப்பி ஓட முயன்றதால்தான் ராஜேந்திரபாலாஜியை கர்நாடகா மற்றும் விருதுநகர் தனிப்படை போலீசார் ஹாசன் மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் முன்பாக சுற்றி வளைத்து விட்டார்கள்.  அதன்பின்பு ராஜேந்திரபாலாஜி போலீசார் கைது செய்துள்ளனர்.

 கைது செய்யப்பட்டபோது ராஜேந்திரபாலாஜி காவி வேட்டியில் டீ சர்ட்டில் இருந்தார்.