மதிமுகவிலிருந்து திமுகவுக்கு தாவும் 17 மா.செ.க்கள் - கதறும் வைகோ -ஸ்டாலின் ஆறுதல்

 
v

 என்னதான் வாக்கெடுப்பு நடத்தி துரை வையாபுரியை தலைமை கழக செயலாளராக கொண்டு வந்தாலும் வைகோ இருந்த இடத்தில் அவரது மகனை வைத்து பார்க்க மாவட்ட செயலாளர்களுக்கு விருப்பம் இல்லாமல் இருக்கிறதாம்.   

 மாவட்ட செயலாளர்களிடம் ஆலோசனை செய்து விட்டுத்தான் வாக்கெடுப்பு நடத்தி இருக்கிறார் வைகோ.  ஆனாலும் வைகோவின் மனம் நோகக் கூடாது என்றுதான் துரை வையாபுரிக்கு ஆதரவாக வாக்களித்து இருக்கிறார்கள்.  அந்த நேரத்தில் வைகோவுக்காக வாக்களித்துவிட்டாலும் பின்னால்  குமுறிக் கொண்டிருக்கிறார்களாம்.   

கட்சியில் இருந்து பெரிதாக பலன் ஒன்றும் இல்லை என்றாலும்,  வைகோ என்ற ஒற்றைமனிதருக்காக கட்சியில் இருந்தோம்.  இப்போது அவரும் கட்சியின் செயல்பாடுகளில் இருந்து விலகி நிற்கிறார்.   துரைவையாபுரிதான்  முன்னிலைப்படுத்தப்படுகிறார்.  மதிமுக வேட்பாளர்கள் திமுக சின்னத்தில்தான் போட்டியிட வேண்டிய நிலைமை இருக்கிறது.  அதற்கு பேசாமல் திமுகவிற்கே போய் விடலாமே என்றுதான் பலர் நினைக்கிறார்களாம்.

v

 இப்படி மதிமுகவின் 17 மாவட்ட செயலாளர்கள் முடிவெடுத்து திமுகவுக்கு செல்ல பேசிக் கொண்டிருக்கிறார்களாம்.   திமுக சீனியர்கள் இதை ஸ்டாலினிடம் சொல்ல , வைகோ அண்ணன் கூட்டணியில் இருக்கிறார்.   அப்படி இருக்கும்போது அவரது கட்சியை சேர்ந்த மா.செக்க்களை  எப்படி நாம் திமுகவில் சேர்த்துக் கொள்வது?  அப்பா இருந்தபோதும் இப்படி செய்யவில்லையே.    கூட்டணியில் இருப்பவர்களை கட்சியில்  நாம் என்றும் சேர்த்துக் கொள்வதில்லை என்று ஸ்டாலின் சொல்ல,

 இப்படித்தான் காங்கிரஸிலிருந்து மனோ வருவதாக சொல்ல,  கூட்டணி தர்மத்தை  சொல்லி,  நாம் சேர்த்துக் கொள்ளவில்லை.   அவர் அதிமுக பக்கம் போய்விட்டார்.  அதேபோல இந்த 17 மாவட்ட செயலாளர்களும் அதிமுக பக்கம் போய்விட்டால் என்ன செய்வது என்று ஸ்டாலினிடம் சொல்லி இருக்கிறார்கள்.

 இதைக் கேட்டதும்,  சரி கொஞ்சம் பொறுத்திருங்கள் யோசித்து முடிவெடுப்போம் என்று சொல்லியிருக்கிறார் ஸ்டாலின்.  இதற்கிடையில் மதிமுகவில் இருந்து வெளியேறத் துடிக்கும் அந்த மா.செக்கள்,   திமுகவிலிருந்து மதிமுக விற்கு வந்து பின்னர் மீண்டும் திமுகவிற்கு சென்ற கோவை கண்ணப்பன் மூலமாக ஸ்டாலினிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.   திமுக சீனியர்களிடம் சொன்ன அதே பதிலைத்தான் கோவை கண்ணப்பன் இடமும் சொல்லியிருக்கிறார் ஸ்டாலின்.

v

 இதற்கிடையில் கட்சி தாவ போவதாக இருக்கும் மாவட்ட செயலாளர்கள் இடம் தனித்தனியாக நேரில் சந்தித்து அவர்களிடம் சமாதானம் பேசி வருகிறாராம் வைகோ.  அதே நேரத்தில் ஸ்டாலினுக்கு நெருக்கமான  எ.வ. வேலுவிடம் சென்று,   மாவட்ட செயலாளர்கள்  திமுகவுக்கு  சென்றுவிட்டால் மதிமுக முழுவதுமாக மூழ்கிப் போய்விடும் என்று கவலையுடன் பேசியிருக்கிறார் வைகோ.

 இதை முதல்வர் ஸ்டாலினிடம் சொல்ல அவர் அண்ணன் மனம் புண்படக் கூடாது கூட்டணி தர்மத்தை காப்பாற்ற வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.   ஆனால் அதிமுக 17 மாவட்ட செயலாளர்கள் எப்படியாவது திமுகவில் சேர்ந்து விட வேண்டுமென்று நாலாபக்கமும் முயற்சி எடுத்து வருகிறார்களாம்.