10 கோடி வாங்கிவிட்டு கோட்பாடு பேசுவதா? திருமா, பாலகிருஷ்ணணை கடுமையாக சாடும் பாஜக

 
ட்ட்ட்

உள்ளாட்சி தேர்தலில்  கூட்டணி கோட்பாடுகளை மீறுவது நல்லதல்ல என்று  கே.பாலகிருஷ்ணன் சொல்லி இருப்பதற்கும்,  ‘’10 கோடிக்கு கட்சியை திமுகவிடம் அடமானம் வைத்து விட்ட பிறகு கோட்பாடாவது, கட்டுப்பாடாவது!’’ என்கிறார் தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி.

திமுக உறுப்பினர்கள் 'ராஜினாமா' செய்ய வேண்டும்  என்று  சொன்ன திருமாவளவனை,  ‘’திமுக உறுப்பினர் ரவிக்குமாரை சொல்கிறீர்களா?’’என்று கேட்கிறார் நாராயணன்.

n

மறைமுக தேர்தலில் கூட்டணி கட்சியினருக்கு திமுக தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்த இடங்களில் திமுகவினர் போட்டி போட்டுக்கொண்டு வெற்றி பெற்று கூட்டணி கட்சியினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளனர்.   இது கூட்டணி தர்மத்தை மீறுகின்ற செயல் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணனும் கொந்தளித்துள்ளனர்.

பதவி வெறியில் சிலர் ஒப்பந்தத்தை காலில் போட்டு மிதிக்கும் விதமாக நடந்து கொண்டிருக்கிறார்கள்.  இது ஆரோக்கியமான அரசியலின் வெளிப்பாடு அல்ல என்பதை சுட்டிக்காட்டுகிறோம் .  கூட்டணி கோட்பாட்டை பாதுகாக்க வேண்டிய கடமையினை  திமுக தலைமை நிறைவேற்றும் என்று நம்புகிறோம் என்று கொந்தளித்திருக்கிறார் கே.பாலகிருஷ்ணன்.

கூட்டணிக் கட்சிகளுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் உத்தரவை மீறி நின்று வெற்றிப் பெற்ற திமுக வேட்பாளர்களை ராஜினாமா செய்ய வைக்க வேண்டும். கூட்டணி அறத்தைக் காத்திட வேண்டும் என்று முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார் திருமாவளவன்.

இதற்குத்தான் நாராயணன் மேற்கண்டவாறு விமர்சித்திருக்கிறார்.   திமுக சின்னத்தில் போட்டியிட்டு ரவிக்குமார் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனதால் திருமாவளவனுக்கு அந்த கேள்வியை கேட்டிருக்கிறார்.