எடப்பாடி கார் மீது செருப்பு வீச்சு - அமமுக மா.செ.க்களுக்கு சம்மன்

 
ttv

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் கார் மீது செருப்பு வீசப்பட்ட விவகாரத்தில் அமமுக மாவட்ட செயலாளர்களுக்கு சம்மன் அனுப்பி இருக்கிறது போலீஸ்.

 கடந்த 5ஆம் தேதியன்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,  முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.  அதன்பின்னர் அவர்கள் காரில் வெளியேறும் நேரத்தில்,  அங்கே சாலையில் ஏராளமான அமமுகவினர் சசிகலா -  தினகரனை வரவேற்க கூடியிருந்தனர் .

அதிமுக - அமமுகவினர் ஒரே இடத்தில் கூடியது பதட்டம் ஏற்பட்டது.   எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அமமுகவினர் முழக்கம் எழுப்பினர்.  சிலர் செருப்புகளை தூக்கி எடப்பாடி பழனிச்சாமியின் கார் மீது வீசினர்.  

c

 நிலைமை மோசமாவதை உணர்ந்த போலீசார் அவர்களை கட்டுப்படுத்தி எடப்பாடி பழனிச்சாமியையும் அவருடன் வந்த கார்களையும்  அங்கிருந்து நிலைமையை சரி செய்தனர்.    தினகரன் தூண்டுதலில் தான் அவர் இவ்வாறு செய்ததாக அதிமுக சார்பில் சென்னை மெரினா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.   மேலும் அவர்களின் செயலுக்கு தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள் .

இது குறித்து தினகரன்,  அதிமுக தலைமை கழகத்தில் குண்டர்களை ஏவி தொண்டர்களை தாக்கும் காட்சிகளை தொலைக்காட்சிகளில் பார்த்தோம்.  ஆனால் இந்த பிரச்சனையை திசை திருப்புவதற்காக இவ்வாறு பேசுகிறார்கள்.  புரட்சித் தலைவரும், அம்மாவும் துயில் கொள்ளும்  இடத்தில் கீழ்த்தரமான வேலைகளை எங்கள் தொண்டர்கள் செய்யமாட்டார்கள் என்று கூறினார் .

e

இந்த நிலையில் நேற்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அமமுக மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கார்த்திகேயன் கட்சி நிர்வாகிகளுடன் சென்று அதிமுக மீது புகார் அளித்திருக்கிறார்.   பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது,   அதிமுகவில் ஏற்கனவே ஓ. பன்னீர்செல்வம்,  எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே மோதல் போக்கு இருக்கிறது.   இதை அனைவரும் அறிவார்கள்.   அதை திசை திருப்புவதற்காகவே தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை தூண்டி அமமுகவினருக்கு எதிராக சதி செய்கிறார்கள்.

 மெரினாவில் தினகரன் வருவதற்கு ஒரு மணி நேரம் முன்பு நடந்த சம்பவம் பற்றி தீர விசாரிக்க வேண்டும் என்றும் அமமுக மீது புகார் அளித்துள்ள மாறனையும் விசாரிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.  அதிமுக புகார் மீது விசாரணை நடத்த அமமுக மாவட்ட செயலாளர்களுக்கு சம்மன் அனுப்பி இருக்கிறது.   இதை சட்டப்படி சந்திப்போம் என்று கூறியிருக்கிறார்.