தமிழகத்தில் 31 ஆம் தேதி வரை பொதுப் போக்குவரத்து இல்லை: தமிழக அரசு

 

தமிழகத்தில் 31 ஆம் தேதி வரை பொதுப் போக்குவரத்து இல்லை: தமிழக அரசு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. நேற்று ஒரே நாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,244 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,38,470 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா பாதித்த நபர்களின் மொத்த எண்ணிக்கை 77,338 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் ஜூலை 31 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருக்கிறது. ஒரளவு தளர்வுகள் அளிக்கப்பட்டிருப்பினும் ரயில் சேவையும், பாதிப்பு அதிகமாக இருக்கும் இடங்களில் பேருந்து சேவையும் இன்னும் தொடங்கப்படவில்லை. இதன் காரணமாக, பொதுப் போக்குவரத்து சேவை எப்போது தொடங்கும் என்ற கேள்வி மக்களிடையே பரவலாக எழுந்துள்ளது.

தமிழகத்தில் 31 ஆம் தேதி வரை பொதுப் போக்குவரத்து இல்லை: தமிழக அரசு

இந்த நிலையில் வரும் 31 ஆம் தேதி வரை தமிழகத்தில் பொதுப் போக்குவரத்து சேவை கிடையாது எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே பொதுப் போக்குவரத்து சேவைக்கு 15 ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் 15 நாட்களுக்கு அந்த தடையை நீடிப்பதாகவும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது. மேலும், அரசின் இந்த நடவடிக்கைக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.