நெய்வேலியில் கடன் தொல்லையால், என்எல்சி ஊழியர் தற்காலை!

 

நெய்வேலியில் கடன் தொல்லையால், என்எல்சி ஊழியர் தற்காலை!

கடலூர்

நெய்வேலியில் கடன் தொல்லையால் என்எல்சி நிறுவன தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கடலூர் மாவட்டம் நெய்வேலி 11-வது வட்டம் பகுதியை சேர்ந்தவர் அருணாசலம் (51). இவர் என்எல்சி அனல் மின்நிலையத்தில் போர்மேனாக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி உமா மகேஸ்வரி. இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். அருணாச்சலம், குழந்தைகளின் கல்வி செலவிற்காக பலரிடமும் கடன் பெற்றிருந்தார்.

நெய்வேலியில் கடன் தொல்லையால், என்எல்சி ஊழியர் தற்காலை!

ஆனால் அவற்றை முறையாக திருப்பி செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர், மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் காலை பணிக்கு செல்ல வேண்டியவர், நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால், அவரது மனைவி அறைக்கு சென்று பார்த்தபோது, அருணாச்சலம் தூக்கில் சடலமாக தொடங்கினார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், நெய்வேலி டவுன்ஷிப் போலீசாருக்கு தகவல் அளித்தார். இதனை அடுத்து, போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.