‘எல்லா மாவட்டங்களிலும் சித்த மருத்துவமனை அமையுங்கள்’ முதல்வருக்கு பழ நெடுமாறன் கோரிக்கை

கொரோனா நோய்த் தொற்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் சீனாவில் தொடங்கியது. கடும் பாதிப்பை விளைவித்த இந்நோய் தொற்று அடுத்து உலகம் முழுவதும் பாதிக்கத் தொடங்கியது. அமெரிக்கா, ரஷ்யா போன்ற வல்லரசு நாடுகள் கூட கொரோனா நோய்த் தொற்றைச் சமாளிக்கப் படாதபாடு பட்டு வருகின்றன.

corona plasma

இந்தியாவில் இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா நோய்த் தொற்றல் அதிகரித்தது. அது விரைவாக அதிகரித்து வருவது பெரும் அச்சத்தை விளைவித்து வருகிறது. தமிழ்நாட்டில் இன்று (ஜூலை 11) வரையில் 1,34,226 பேர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். 85,915 பேர் நலம் பெற்று வீடு திரும்பியுள்ளனர். 44,410 பேர் சிகிச்சையில் உள்ளனர். 1898 பேர் மரணமடைந்துவருகின்றனர்.

இந்த நிலையில் அலோபதி சிகிச்சை மட்டுமல்லாது சித்த மருத்துவ சிகிச்சையையும் பரவலாக அளிக்க வேண்டும் என தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார்

pazha nedumaran

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சென்னையில் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தனியாக அமைக்கப்பட்ட சித்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 1050-க்கும் மேற்பட்டவர்களுக்கு சித்த மருந்துகள் கொடுக்கப்பட்டு அவர்களில் 750-பேர் முழுமையாக நலம் பெற்றுத் திரும்பியுள்ளனர், 300-பேர் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள், அனுமதிக்கப்பட்ட நோயாளிகளில் ஒரு உயிரிழப்புக் கூட ஏற்படவில்லை என அம்மருத்துவமனையின் மருத்துவர் வீரபாபு அறிவித்திருக்கும் செய்தி அனைவருக்கும் மகிழ்ச்சியை அளிக்கிறது. இதற்காக அவரையும், அவருடன் தொண்டாற்றி வரும் சித்த மருத்துவப் பணியாளர்களையும் மனமாறப் பாராட்டுகிறேன்.

பல மாவட்டங்களிலும் கொரோனா நோய் பரவிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், அலோபதி மருத்துவமனைகளில் சிகிச்சை அளிப்பதோடு, சித்த மருத்துவ முறையிலும் சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். கொரோனா நோய் பரவியிருக்கும் மாவட்டங்களிலும் மாவட்டத்திற்கு ஒன்றாக சித்த மருத்துவமனைகளைத் திறந்து, சித்த மருத்துவமுறையில் சிகிச்சை அளிக்க முன் வருமாறு தமிழக சுகாதாரத்துறை அமைச்சரையும், முதலமைச்சரையும் வேண்டிக்கொள்கிறேன்.’ என்று முதல்வருக்கு கோரிக்கை வைத்திருக்கிறார்.

Most Popular

பக்ரித் பண்டிகை கொண்டாட ஊருக்கு சென்ற ராணுவ வீரர் மாயம்… தேடுதல் பணி தீவிரம்!

பக்ரீத் பண்டிகை தினத்தை கொண்டாடுவதற்காக ஜம்மு காஷ்மீர் சோபியான் மாவட்டத்திற்கு சென்ற 162-வது பட்டாலியன் படை பிரிவை சேர்ந்த ரைபிள்மென் ஒருவர் மாலை 5 மணி முதல் காணாமல் போயுள்ளார். காணாமல் போன...

நாய்க்குட்டிக்கும் மாஸ்க் அணிவித்த சிறுவன்… இதயங்களை வென்ற செயல்!

அரசாங்கம் மக்கள் வெளியில் செல்லும் போது மாஸ்க் அணிந்து செல்லுமாறு தொடர்ந்து வலுயுறுத்தி வருகிறது. பெரும்பாலான மக்கள் அதை கடைபிடிப்பதில்லை. ஆனால் சிறுவன் ஒருவன் தான் மாஸ்க் அணிந்துள்ளது மட்டுமில்லாமல் தனது மாஸ்க் அணிவித்து...

ஆளுநர் மாளிகையில் சுதந்திர தின நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து

ஆளுநருக்கும், ஆளுநர் மாளிகையில் உள்ளவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து ராஜ்பவனில் நடைபெற இருந்த சுதந்திர தின நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழக ஆளுநர் மாளிகையில் 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான...

இன்று 5,609 பேருக்கு கொரோனா… இதுவரை இல்லாத அளவிற்கு அதிக பட்சமாக 109 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் இன்று 58,211 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 5,609 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.63 லட்சத்தைக் கடந்துள்ளது. பரிசோதனை செய்யப்படுவோர்கள் மற்றும்...