முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்பு…அதிகாரபூர்வ அறிவிப்பு!

 

முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்பு…அதிகாரபூர்வ அறிவிப்பு!

ஆட்சியமைக்க கோரி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

திமுக நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. இதனால் அக்கட்சியின் சார்பில் தலைவர் மு.க. ஸ்டாலின் சட்ட மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் அவர் தமிழகத்தில் ஆட்சி செய்ய ஆளுநரிடம் உரிமை கோரினார்.இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் மாளிகை சென்று அவர் ஆளுநர் பன்வாரிலாலை சந்தித்து 133 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை வழங்கி உரிமை கோரினார்.

முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்பு…அதிகாரபூர்வ அறிவிப்பு!

இதை தொடர்ந்து தமிழகத்தில் ஆட்சியமைக்க மு.க.ஸ்டாலினுக்கு முறைப்படி ஆளுநர் பன்வாரில் லால் புரோகித் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆளுநரின் அழைப்பு கடிதத்தை அவரது செயலாளர் அனந்தராம் பட்டேல் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார். நாளை மறுநாள் ஸ்டாலின் ஆளுநர் மாளிகையில் பதவியேற்கவுள்ள நிலையில் 20 நிமிடம் அதுகுறித்து பேசப்பட்டது.

முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்பு…அதிகாரபூர்வ அறிவிப்பு!

இந்நிலையில் தமிழக முதல்வராக நாளை மறுநாள் காலை 9 மணிக்கு பதவியேற்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாடு அமைச்சரவை பதிவியேற்பு விழா என்ற அழைப்பிதழுடன் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம் ஸ்டாலின் மற்றும் அவரது அமைச்சரவை நாளைமறுநாள் பதவியேற்கவுள்ளனர்.