“உதயநிதி ஸ்டாலினின் பரம்பரையே பிளேபாய் தான்” : அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்!

 

“உதயநிதி ஸ்டாலினின் பரம்பரையே பிளேபாய் தான்” : அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்!

திமுக எம்எல்ஏ கு.க. செல்வம் திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், ‘உதயநிதி ஸ்டாலினால் செல்வம் ஏமாந்து விட்டதாகவும் உதயநிதி ஸ்டாலின் செல்வத்திற்கு சாக்லேட் கொடுத்து அவரை ஏமாற்றி விட்டார் என்றும் அவர் ஒரு சாக்லேட் பாய்’ என்று விமர்சித்திருந்தார்.

“உதயநிதி ஸ்டாலினின் பரம்பரையே பிளேபாய் தான்” : அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்!

இதற்கு பதிலடி கொடுத்த உதயநிதி ஸ்டாலின், ‘சாக்லேட் பாய் என்பது தவறான வார்த்தை அல்ல; அது ஒரு பாராட்டுதலுக்குரிய வார்த்தை. என்னை சாக்லேட் பாய் என்று கூறிய அமைச்சர் ஒரு ப்ளேபாய்‘ என்றுதெரிவித்தார்.

“உதயநிதி ஸ்டாலினின் பரம்பரையே பிளேபாய் தான்” : அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்!

இந்நிலையில் இன்று சென்னை காசிமேட்டில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமாரிடம் உதயநிதி கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், ‘உதயநிதி ஸ்டாலினின் பரம்பரையே பிளேபாய் தான். அவர் தாத்தா, அப்பா ஸ்டாலின் உள்ளிட்ட அனைவரும் பிளேபாய்’ என்று விமர்சித்துள்ளார்.