நான் இபாஸ் எடுக்காமல் சென்றது உண்மை என்றால் என் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? உதயநிதி ஸ்டாலின் கேள்வி

நான் இபாஸ் எடுக்காமல் சென்றது உண்மை என்றால் என் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? உதயநிதி ஸ்டாலின் கேள்வி

தமிழகத்தில் இபாஸ் நடைமுறை தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது. அத்தியாவசிய தேவைகளுக்கு செல்லும் மக்களுக்கு அது இடைஞ்சலாக இருப்பதால் அந்த நடைமுறையை தகர்க்க வேண்டும் என்று திமுக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இப்போதைக்கு அதனை நீக்க முடியாது என முதல்வர் தெரிவித்துவிட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை அண்ணாநகரில் தாண்டமுத்து என்ற ஆட்டோ ஓட்டுநர் எஃப்சி செய்வதில் இழுத்தடித்ததால் மன உளைச்சலுக்கு ஆளான அவர், ஆட்டோவை கொளுத்தி விட்டு தானும் தற்கொலைக்கு முயன்றார். இச்சம்பவம் தொடர்பான செய்திகள் வெளியாகின.

நான் இபாஸ் எடுக்காமல் சென்றது உண்மை என்றால் என் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? உதயநிதி ஸ்டாலின் கேள்வி

இந்த நிலையில் அந்த ஓட்டுனருக்கு புதிய ஆட்டோ வாங்க முக ஸ்டாலின் மகனும் திமுக இளைஞரணிச் செயலாளரும் ஆன உதயநிதி ஸ்டாலின் காசோலை கொடுத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், இபாஸ் முறையில் முறைகேடு இருப்பதாகவும் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் நான் பாஸ் எடுக்காமல் சென்றதாக சொன்னது உண்மை என்றால் என் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என கேள்வி எழுப்பினார். மேலும், நாங்கள் தேர்தல் வேலையை துவக்கி விட கூடாது என்று தான் இபாஸ் முறை இன்னும் நீக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.