மயிலம் முருகன் கோயில் பங்குனி உத்திர தேரோட்டம்… ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு…

மயிலம் முருகன் கோயில் பங்குனி உத்திர தேரோட்டம்… ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு…

விழுப்புரம்

மயிலம் முருகன் கோயிலில் இன்று நடந்த பங்குனி உத்திர திருவிழா தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மயிலத்தில் பிரசித்தி பெற்ற சுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்து உள்ளது. இங்கு பங்குனி உத்திர திருவிழா கடந்த 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனையொட்டி, நாள்தோறும் காலை, மாலை வேளைகளில் சுவாமி, வள்ளி, தெய்வானை சமேதராக பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற்று வருகிறது.

மயிலம் முருகன் கோயில் பங்குனி உத்திர தேரோட்டம்… ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு…

திருவிழாவின் 8ஆம் நாளான நேற்று இரவு திருக்கல்யாண வைபவமும், இதனை அடுத்து, சுவாமி வெள்ளி குதிரை வாகனத்தில் வீதி உலா வந்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி உத்திர தோரோட்டம் இன்று காலை 6 மணிக்கு நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் வள்ளி, தெய்வானை சமேராய் சுப்ரமணிய சுவாமி எழுந்தளினார்.

மயிலம் பொம்மபுர ஆதினம் 20-ஆம் பட்டம் சிவஞான பாலயசுவாமிகள் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் விழுப்புரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமியை வழிபட்டு சென்றனர்.

மயிலம் முருகன் கோயில் பங்குனி உத்திர தேரோட்டம்… ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு…

இதனை தொடர்ந்து, நாளை தெப்ப உற்சவமும், நாளை மறுநாள் முத்துப்பல்லாக்கு உற்சவமும் நடைபெறுகிறது. தொடர்ந்து வரும் 30-ஆம் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் பங்கு உத்திர திருவிழா நிறைவடைய உள்ளது