பழனி பங்குனி உத்திரம் திருவிழா… விமரிசையாக நடந்த தங்கரதம் புறப்பாடு…

 

பழனி பங்குனி உத்திரம் திருவிழா… விமரிசையாக நடந்த தங்கரதம் புறப்பாடு…

திண்டுக்கல்

பழனி முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, நேற்று பக்தர்கள் இன்றி தங்கரதம் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயில், முருக கடவுளின் 3ஆம் படைவீடாக திகழ்ந்து வருகிறது. இங்கு பங்குனி புகழ்பெற்ற பங்குனி உத்திர திருவிழா கடந்த 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதனையொட்டி, நாள்தோறும் முத்துக்குமார சுவாமி, வள்ளி – தெய்வானையுடன், வெள்ளி யானை மற்றும் தங்க மயில் வாகனங்களில் எழுந்தருளி உலா வருகிறார்.

பழனி பங்குனி உத்திரம் திருவிழா… விமரிசையாக நடந்த தங்கரதம் புறப்பாடு…

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி உத்திர தேரோட்டம் நாளை நடைபெற உள்ளது. இந்த நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாளொன்றுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் 25 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. மேலும், நேற்று முதல் வரும் 30ஆம் தேதி வரை பக்தர்கள் பங்கேற்கும் தங்கரத புறப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளது.

எனினும், கோயில் நிர்வாகம் சார்பில் தங்கரத புறப்பாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனையொட்டி, நேற்று சின்ன முத்துக்குமார சுவாமி சிறப்பு அலங்காரத்தில் தங்க ரதத்தில் எழுந்தளினார். முன்னதாக சுவாமிக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்ற நிலையில், தொடர்ந்து கோயில் பொறுப்பு இணை ஆணையர் குமரதுரை, இணை ஆணையர் செந்தில்குமார் உள்ளிட்டோர் வடம் பிடித்து தங்க ரதத்தை இழுத்தனர்.