முதலமைச்சர் தொடங்கி வைத்த ‘தொலைக்காட்சி மூலம் பாடம் கற்பித்தல்’ திட்டம்’

 

முதலமைச்சர் தொடங்கி வைத்த ‘தொலைக்காட்சி மூலம் பாடம் கற்பித்தல்’ திட்டம்’

கொரோனா பாதிப்பு என்பது உலகம் முழுவதுமே அதிகரித்து வருகிறது. தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மூடப்பட்டு கிடக்கின்றன. பள்ளிகள் எப்போது தொடங்கப்படும் என்ற கேள்விக்கு பதில் கிடைக்காத நிலையே இன்று உள்ளது. பத்தாம் வகுப்புத் தேர்வுகள் முதலில் ஒத்தி வைக்கப்பட்டன. பிறகு அந்தத் தேர்வுகள் ரத்தே செய்யப்பட்டன. தனியார் பள்ளிகளில் ஆன்லைன் மூலம் பாடம் நடத்தும் முறையைத் தொடங்கிவிட்டனர்.

முதலமைச்சர் தொடங்கி வைத்த ‘தொலைக்காட்சி மூலம் பாடம் கற்பித்தல்’ திட்டம்’

பல தனியார் பள்ளிகளில் ஆன்லைன் கற்பித்தலுக்கான தொகையை வசூலித்து, ஆசிரியர்களைப் பாடம் நடத்தச் சொல்லிவருகின்றனர். ஆன்லைன் கல்வி குறித்து கல்வியாளர்கள் பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இன்னொரு புறம், தனியார் பள்ளி மாணவர்கள் மட்டும் கல்வியா… அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இல்லையா… என்ற கேள்வியும் எழுந்தது. எனவே, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் விரைவில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைன் கல்வி தொடங்கப்படும் என அறிவித்தார். அப்போதும் கல்வி செயற்பாட்டாளர்கள் இணையம் வழியே கல்வி கற்பிதலில் உள்ள சிக்கல்களைக் கூறினர்.

முதலமைச்சர் தொடங்கி வைத்த ‘தொலைக்காட்சி மூலம் பாடம் கற்பித்தல்’ திட்டம்’

தற்போது கல்வி தொலைக்காட்சி மூலம் அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கல்வி கற்பித்தல் முறை தொடங்கப்பட்டுள்ளது. திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரண்டரை மணி நேரம் பாடங்கள் நடத்தப்படும். இந்தத் திட்டத்தை இன்று (ஜூலை 14) தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி தொடங்கி வைத்தார். மேலும் 10 மற்றும் 12 -ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவசப் பாடநூல்களை வழங்குவதையும் தொடங்கி வைத்தார்.

கல்வி தொலைக்காட்சியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் பாடம் நடத்துவதை வீடியோவாகப் பதிவு செய்து வைத்துள்ளனர். அவையே நாளை முதல் ஒளிப்பரப்படும் எனச் சொல்லப்படுகிறது.