உங்க இஷ்டத்துக்குலாம் ஆன்லைன் வகுப்புகள் நடத்த கூடாது! மத்திய அரசு விதிமுறைகள் வெளியீடு

 

உங்க இஷ்டத்துக்குலாம் ஆன்லைன் வகுப்புகள் நடத்த கூடாது! மத்திய அரசு விதிமுறைகள் வெளியீடு

கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் 16 முதல் நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. வழக்கமாக ஜூன் மாதத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும். ஆனால் கொரோனா ஊரடங்கால் கடைசி கல்வியாண்டே இன்னும் முடிவுக்கு வரவில்லை. பள்ளிகள் எப்போது திறக்கம் என தெரியாததால் பல தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் 6 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே ஆன்லைன் வகுப்புகளை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் ஆன்லைன் வகுப்புகளால் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மாணவர்கள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

உங்க இஷ்டத்துக்குலாம் ஆன்லைன் வகுப்புகள் நடத்த கூடாது! மத்திய அரசு விதிமுறைகள் வெளியீடு

இந்நிலையில் மத்திய அரசு ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதற்கான வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில், எல்.கே.ஜி., யூ.கே.ஜி குழந்தைகளுக்கு 30 நிமிடங்கள் மட்டுமே ஆன்லைன் வகுப்புகள் நடத்த வேண்டும் என்றும், 1 முதல் 8ஆம் வகுப்பு வரை தலா 45 நிமிடங்கள் என 2 ஆன்லைன் வகுப்பு மட்டுமே நடத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு 45 நிமிடங்களுக்கு மிகாமல் 4 வகுப்புகள் நடத்தலாம் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.