அணைக்கரை முத்து மரண விவகாரத்தில் நீதிக்கான சட்டப்போராட்டத்தில் திமுக துணைநிற்கும் : முக ஸ்டாலின்

 

அணைக்கரை முத்து மரண விவகாரத்தில் நீதிக்கான சட்டப்போராட்டத்தில் திமுக துணைநிற்கும் :  முக ஸ்டாலின்

தென்காசி மாவட்டம் கடையத்தை அடுத்த வாகைகுளத்தை சேர்ந்த அணைக்கரைமுத்து (76) என்பவர், தன் தோட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக மின்வேலி அமைத்து இருப்பதாக புகார் எழுந்தது. இதனால் அவரை விசாரிக்க, கடையம் வன சரக அதிகாரிகள் அழைத்து சென்றுள்ளனர். அப்போது முத்து மின்வேலி அமைத்ததை ஒப்புக்கொண்டு, அபராதம் செலுத்த சம்மதித்ததாக தெரிகிறது. விசாரணையின் போது அதிகாரிகளிடம் முத்து நெஞ்சு வலிப்பதாக கூறியதால் அவர் உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், அவர் அங்கு உயிரிழந்துள்ளார்.

அணைக்கரை முத்து மரண விவகாரத்தில் நீதிக்கான சட்டப்போராட்டத்தில் திமுக துணைநிற்கும் :  முக ஸ்டாலின்

ஆனால் இதனை ஏற்றுக் கொள்ளாத முத்துவின் குடும்பத்தினர், வனத்துறை அதிகாரிகள் விசாரணையில் அவரை தாக்கியதால் தான் உயிரிழந்ததாக புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதையடுத்து   உயிரிழந்த விவசாயி முத்துவின் குடும்பதுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு பணி வழங்கப்படும் என்றும் நீதித்துறை நடுவர் பிறப்பிக்கும் உத்தரவின் அடிப்படையில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின், “சாத்தான்குளம் ரத்தச்சுவடுகள் காயும்முன் தென்காசியில் மற்றொரு மரணம்! 56வயது அணைக்கரை முத்துவை வனத்துறையினர் சட்டைகூட அணியவிடாமல் இரவில் அழைத்துச் சென்றிருக்கிறார்கள்; கஸ்டடியிலேயே இறந்திருக்கிறார் சட்டத்தின் ஆட்சிதானா இது? #JusticeForAnaikaraiMuthu-விற்கு திமுக துணை நிற்கும்!” என்று பதிவிட்டுள்ளார்.