சாத்தான்குளம் சி.பி.சி.ஐ.டி ஆவணங்களில் சந்தேகம்! – சி.பி.ஐ அதிகாரிகள் நேரில் விசாரணை

சாத்தான்குளம் சி.பி.சி.ஐ.டி ஆவணங்களில் சந்தேகம்! – சி.பி.ஐ அதிகாரிகள் நேரில் விசாரணை

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் அளித்த ஆவணங்களில் சந்தேகம் இருப்பதாக கூறி சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாத்தான்குளம் சி.பி.சி.ஐ.டி ஆவணங்களில் சந்தேகம்! – சி.பி.ஐ அதிகாரிகள் நேரில் விசாரணை
சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ், பெனிக்ஸ்ஸை போலீசார் அழைத்துச் சென்று அடித்துக் கொலை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை தற்போது சி.பி.ஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். முன்னதாக இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து வந்தனர். சி.பி.ஐ-க்கு வழக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் வழக்கு

சாத்தான்குளம் சி.பி.சி.ஐ.டி ஆவணங்களில் சந்தேகம்! – சி.பி.ஐ அதிகாரிகள் நேரில் விசாரணை

தொடர்பான ஆவணங்களை சி.பி.ஐ அதிகாரிகளிடம் ஒப்படைத்திருந்தனர்.
சி.பி.சி.ஐ.டி வழங்கிய ஆவணங்களில் சந்தேகங்கள் இருந்ததாக கூறி சி.பி.ஐ கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் சுக்லா நேற்று தூத்துக்குடியில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்துக்கு நேரில் வந்து அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். மாலை 5 மணி அளவில் தொடங்கிய இந்த விசாரணை இரவு 10 மணி வரை நீண்டது. சி.பி.சி.ஐ.டி தரப்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களின் ஜெராக்ஸ் காப்பியை வாங்கிக் கொண்டு சி.பி.ஐ அதிகாரிகள் இரவில் மதுரைக்கு புறப்பட்டனர்.
சி.பி.சி.ஐ.டி தாக்கல் செய்த ஆவணங்களில் சி.பி.ஐ அதிகாரிகள் சந்தேகம் கிளப்பியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.