“மெஹபூபா முப்தியை விடுவிக்க வேண்டிய சரியான தருணம் இதுதான்” : ராகுல் காந்தி ட்வீட்!

7 மாதங்களுக்கு பிறகு பரூக் அப்துல்லா, முன்னாள் உமர் முதல் அப்துல்லா  வீட்டுக்காவலிருந்து விடுவிக்கப்பட்டார். 

2019 ஆகஸ்ட் 5ம் தேதியன்று மத்திய அரசு, ஜம்மு&காஷ்மீர் மாநிலத்துக்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்த்தை நீக்கியது. மேலும் அந்த மாநிலத்தை ஜம்மு அண்டு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களா பிரித்தது. இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்னதாக, ஜம்மு அண்டு காஷ்மீரின் முன்னாள் முதல்வர்கள் மெஹபூபா முப்தி, உமர் அப்துல்லா, பரூக் அப்துல்லா உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் பிரிவினைவாதிகளை வீட்டுகாவலில் வைத்தது.

முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி

காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பியவுடன் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள தலைவர்கள் படிப்படியாக விடுவிக்கப்படுவார்கள் என ஜம்மு அண்டு காஷ்மீர் நிர்வாகம் கூறியது. அதன்படி கொஞ்சம் கொஞ்சமாக தலைவர்களை வீட்டு காவலிருந்து விடுவித்தது. 7 மாதங்களுக்கு பிறகு பரூக் அப்துல்லா, முன்னாள் உமர் முதல் அப்துல்லா  வீட்டுக்காவலிருந்து விடுவிக்கப்பட்டார்.

ஆனால் மெஹபூபா முப்தி தொடர்ந்து வீட்டு காவலில் இருந்தார். கடந்த 8 மாதங்களாக அரசுக்கு சொந்தமான 2 விருந்தினர் மாளிகையில் வைக்கப்பட்டு இருந்தார். கடந்த ஏப்ரல்  7ம் தேதியன்று அவரது சொந்த வீட்டுக்கு மெஹபூபா முப்தி மாற்றப்பட்டார். ஆனால் அவரது வீட்டுக்காவல் தொடர்ந்தது. இதை தொடர்ந்து அவரது வீட்டுக்காவல் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. ஸ்ரீநகர் மாவட்ட மாஜிஸ்திரேட் மெஹபூபா முப்தியின் வீட்டுக்காவலை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டார்.

இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி, ” அரசியல் தலைவர்களை சட்டவிரோதமாக அடைத்து வைப்பது ஜனநாயக மாண்பை குலைத்துவிடும். மெஹபூபா முப்தியை விடுவிக்க வேண்டிய சரியான தருணம் இதுதான்” என அவர் ட்வீட் செய்துள்ளார்.

Most Popular

சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான கருணாஸின் பாதுகாவலருக்கு கொரோனா!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,063பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த...

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,063பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின்...

வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி; கர்நாடகா, கேரளா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

வங்க கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாகவும் வானிலை காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை தொடரும் என்றும் அதீத கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் கோவா...

இந்தியாவில் 24 மணிநேரத்தில் 52,509 பேருக்கு கொரோனா : 857 பேர் பலி!

இதுவரை உலகம் முழுவதும் 1 கோடியே 86 லட்சத்து 91 ஆயிரத்து 659 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரசால் 7 லட்சத்து 03 ஆயிரத்து 371 பேர் பலியாகி...