5 ஆயிரம் பேருக்கு பிரசவம் பார்த்த செவிலியர் பிரசவத்தில் உயிரிழப்பு

 
னு

ஐந்தாயிரம் பேருக்கு பிரசவம் பார்த்த செவிலியர்  தனது பிரசவத்தின்போது உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் அப்பகுதியினர் இடையே பெரும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

 மகாராஷ்டிராவில் ஹின்கோலி மாவட்டத்தில்  இயங்கி வரும்  அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தவர் ஜோதி காவ்லி.   முப்பத்தி எட்டு வயதான இவர் கடந்த 5 ஆண்டுகளாக பல்வேறு அரசு மருத்துவமனைகளில் செவிலியராக பணியாற்றி வந்துள்ளார்.

 அதனால் அவர் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பிரசவம் பார்த்திருக்கிறார்.  இந்த நிலையில்  கர்ப்பமாக இருந்த ஜோதி காவ்லி கடந்த 1ஆம் தேதியன்று வேலைக்கு வந்து இருக்கிறார்.   மறு தினம் 2 ஆம் தேதி அன்று அவருக்கு பிரசவ வலி எடுத்து இருக்கிறது.   இதை அடுத்து பணிபுரியும் அரசு மருத்துவமனையிலேயே அவர் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.   அங்கு அவருக்கு குழந்தை பிறந்திருக்கிறது.  

nu

 குழந்தை பிறந்தவுடன் ஜோதியின் உடல் நிலை பாதிக்கப்பட்டிருக்கிறது.   நிமோனியா பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டிருக்கிறது அவருக்கு . இதையடுத்து அவர் நான்டெட் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.   அங்கும் நிலைமை உடல்நிலை மிகவும் மோசமானது தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

தனியார் மருத்துவமனையில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்திருக்கிறது.   ஆனாலும் சிகிச்சை பலனின்றி ஜோதி காவ்லி உயிரிழந்திருக்கிறார்.  

 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பிரசவம் பார்த்த,  தாய்மார்களுக்கு மருத்துவ உதவி செய்து வந்த செவிலியர் ஜோதி காவ்லி பிரசவத்தில் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியையும் அப்பகுதியினர் இடையே பெரும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.