நடுரோட்டில் மாணவர்கள் மோதல் - வைரலாகும் வீடியோ

 
stu

நடுவீதியில் சட்டையை கழற்றிக் கொண்டு இரு கோஷ்டிகளாக பிரிந்து அடித்துக்கொள்ளும் தனியார் பள்ளி மாணவர்களின் அதிர்ச்சி காட்சிகள் வீடியோவாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

 புதுச்சேரி மாநிலத்தில் முத்தியால்பேட்டை பகுதியில் அமைந்திருக்கிறது அந்த தனியார் பள்ளி.    அப்பள்ளி மாணவர்கள் 10க்கும் மேற்பட்டோர் முத்தியால்பேட்டை மாரியம்மன் கோவில் வீதியில் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொள்கின்றார்கள்.   இதைப்பார்த்த அங்கிருந்தவர்கள்,   ஏன் அடித்துக் கொள்கிறார்கள் என்று கேட்கிறார்கள். 

st

 ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டே இருக்க , திடீரென்று ஒரு மாணவர் கிளம்புங்க உடனே...  என்று சொல்ல,   சண்டையை நிறுத்திவிட்டு கிளம்பி விடுகிறார்கள். சண்டே நடக்கும்போதே இதை ஒரு மாணவன் வீடியோ எடுக்க,   இன்னொரு  சிறிய வயது மாணவன் ஒருவன்,    எதுக்கு அண்ணா இதை வீடியோ எடுக்குறீங்க என்று கேட்கிறார்.   இதுவும் அந்த வீடியோவில் பதிவாகி இருக்கிறது .

இதன் மூலம் மாணவர்களே இந்த சண்டையை வீடியாவாக எடுத்து வெளியிட்டது தெரியவருகிறது.  இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி புதுச்சேரி மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

 புதுச்சேரி மாநில முத்தியால்பேட்டை போலீசாரிடம் இது குறித்து பலரும்   மாணவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்று கேள்வி எழுப்ப,  இது தொடர்பாக யாரும் இதுவரை புகார் எதுவும் தெரிவிக்கவில்லை.  புகார் வந்ததும் இது குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.