பூங்காவில் சில்மிஷம் - நிர்வாணப்படுத்தி ஊர்வலம்

 
me

கர்நாடக மாநிலத்தில்விஜயபுரா மாவட்டத்தை சேர்ந்தவர் மேகராஜ்.   இவர் ஹாசன் மாவட்டத்தில்  மஹாராஜா பூங்காவில் ஒரு பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றிருக்கிறார். 

போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதி என்பதால்  அப்பகுதியில் இருந்தவர் மேகராஜை சுற்றிவளைத்து  தர்ம அடி கொடுத்திருக்கிறார்கள்.  பின்னர் அவரின் ஆடைகளை அகற்றி நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

mek

இதையறிந்து போலீசார் அவரை மீட்டு அழைத்து சென்றுள்ளனர்.    போலீசாரின் விசாரணையில்தான் அவர் விஜயபுரா மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும் மேகராஜ் என்பதும் தெரியவந்திருக்கிறது.

பூங்காவில் இருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால்தான் அவரை சரமாரியாக அடித்து நிர்வாணப்படுத்தி போலிசில் ஒப்படைக்க இழுத்து  சென்றிருக்கிறார்கள்.  அதற்குள் போக்குவரத்து சிக்னல் அருகே போலீசார் மீட்டுவிட்டனர்.

இதையடுத்து, நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்ற அடையாளம் தெரியாத 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஆனால், பாதிக்கப்பட்ட பெண்,  மேகராஜ் மீது எந்த புகாரும் கொடுக்கவில்லை  என்கிறார்கள்.  அதே நேரம் தன்னை பொதுஇடத்தில் கொடூரமாக தாக்கி நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மேகராஜ் புகார் அளித்திருக்கிறார்.  அதன்படியே 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.