பிரதமருக்கு கருப்பு கொடி காட்டியவர் மீது துப்பாக்கிச்சூடு

 
m

பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக் கொடி காட்டிய காங்கிரஸ் தலைவர் மீது அடையாளம் தெரியாத 3 நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சமாஜ்வாடி கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தவர் ரீட்டா யாதவ்.   இவர்  உத்திரபிரதேச மாநிலம் சுல்தான்பூரில் கடந்த நவம்பர் 16ம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடியின் பேரணியில் கருப்புக்கொடி காட்டியதாக பரபரப்பு செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன.

இந்நிலையில்,    கருப்புக்கொடி காட்டிய ரீட்டா யாதவ் மீது  துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கிறது.

ree

துப்பாக்கிச் சூட்டில் காலில் படுகாயம் அடைந்த ரீட்டா யாதவ் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாகவும் அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தினால் உத்தரபிரதேசத்தில் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது.

 லக்னோ -வாரணாசி நெடுஞ்சாலையில் ரீட்டா யாதவின் கார் ஓட்டுனரை துப்பாக்கி முனையில் நிறுத்தி ரீட்டா யாதவ் மீது மூன்று நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.   சுல்தான்பூர் போலீசார் அடையாளம் தெரியாத அந்த மூன்று நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.