அதிர்ச்சி ஆடியோ: ‘’பிரதமரின் பயணத்தில் தடை ஏற்படுத்தியது நாங்கள் தான்!நாங்கள் பொறுப்பேற்கிறோம்!’’

 
au

பிரதமர் நரேந்திர மோடியின் பயணத்தில் தடையை ஏற்படுத்தியது நாங்கள் தான்.  அதற்கு நாங்கள் பொறுப்பேற்கிறோம்.  இந்த விவகாரத்தை விசாரிக்கக் கூடாது என்ற பரபரப்பு ஆடியோ வெளிநாட்டில் இருந்து வந்திருக்கிறது.   பிரதமரின் பயணத்தில் ஏற்பட்ட குளறுபடிகளால் பல்வேறு கட்ட விசாரணைகள் நடந்து வரும் நிலையில்,  வெளிநாட்டில் இருந்து வந்திருக்கும் இந்த ஆடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.  சீக்கியருக்கு நீதி என்ற அமைப்பிலிருந்து இந்த ஆடியோ வந்திருக்கிறது.

au

 பிரதமரின் பஞ்சாப் பயணத்தின்போது உள்ளூர் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்டது.  அதனால் தான் குளறுபடி ஏற்பட்டதாக பேசப்பட்டு வரும் நிலையில் வெளிநாட்டைச் சேர்ந்த அமைப்பு அந்த குளறுபடிக்கு பொறுப்பேற்று இருப்பது பெரும் அதிர்ச்சியையும் சலசலப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.  அப்படி என்றால் அந்த வெளிநாட்டைச் சேர்ந்த அமைப்பிற்கும் போராட்டத்தில் ஈடுபட்டோருக்கும் தொடர்பு இருக்கிறதா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. 

 பிரதமர் நரேந்திர மோடியின் பயணத்தின் போது ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடிகள் குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.   இது தொடர்பாக மத்திய மாநில அரசுகள் அமைத்திருக்கும் விசாரணைக் குழுக்கள் கலைக்கப்படுவதாகவும் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. 

o

 இந்த நிலையில் டெல்லியை சேர்ந்த சில மூத்த வழக்கறிஞர்களின் செல்போன்களுக்கு ஐரோப்பிய நாடான பிரிட்டனிலிருந்து சீக்கியருக்கு நீதி என்கிற அமைப்பில் இருந்து அழைப்பு வந்திருக்கிறது.   அந்த அழைப்பை ஏற்கவும்,  ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வாசகங்கள் அந்த அழைப்பில் ஒலிபரப்பப் பட்டிருக்கின்றன.  அந்த ஒலிபரப்பில்,  ‘’ பிரதமரின் பயணத்தில் தடையை ஏற்படுத்தியது நாங்கள்தான்.  அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்கிறோம்.  1984 சீக்கியர் கொல்லப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகள் யாருக்கும் தண்டனை அளிக்காத ‘’ உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தை விசாரிக்க கூடாது என்று அந்த தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஐந்தாம் தேதி அன்று  பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் நடைபெறுவதாக இருந்த கூட்டத்தில் பங்கேற்க சென்றார்.  வானிலை சரியாக இல்லாததால் அவர் தரைவழியாக செல்வது என்று பயணம் மாற்றப்பட்டது.   பிரதமர் மோடியின் வாகனம் ஹூசைனி வாலாவிருந்து 30 கி.மீட்டர் தூரத்தில் சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியில் போராட்டக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பிரதமர் மோடி செல்லும் வாகனம் சுமார் 20 நிமிடங்கள் சாலையிலேயே நகர முடியாமல் நின்றது. இதனையடுத்து பஞ்சாப் நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டு பிரதமர் மீ்ண்டும் டெல்லி திரும்பினார்.

இந்த சம்பவம் பிரதமரின் உயிருக்கு ஏற்பட்ட ஆபத்து என்று பெரும்  சர்ச்சை எழுந்திருக்கிறது.

 நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த பஞ்சாப் மாநில அரசு 3 பேர் கொண்ட குழுவை அமைத்து இருந்தது.   ஆனாலும் மத்திய உள்துறை அமைச்சகம் பஞ்சப் டிஜிபி சித்தார்த் சட்டோபாத்யாயாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது.   சிறப்பு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் டிஜிபிக்கு விதிக்கப்பட்ட சட்டபூர்வ கடமைகளை நீங்கள் மீறி இருக்கிறார்கள் என்பதற்கு முதல் கட்ட முகாந்திரம் தெளிவாக தெரிகிறது.   உங்கள் மீது அகில இந்திய சேவை சட்டப்படி ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்ற கேள்வி கேட்கப்பட்டது.   

ss
 இந்த நோட்டீஸ் பதிண்டா எஸ். எஸ். பி., பெரோஸ்பூர் எஸ். எஸ். பி ஆகியோருக்கும் அனுப்பப்பட்டன.  அவர்களுக்கான நோட்டீசில்,    பிரதமரின் வாகனத்திற்கு 100 மீட்டர் முன்பு போராட்டக்காரர்கள் திரண்டிருக்கிறார்கள்.   இதனால் 15 முதல் 20 நிமிடங்கள் வரை பிரதமரின் கால்வாய் ஸ்தம்பித்து நின்றிருக்கிறது. இது தவிர்க்கப்பட வேண்டிய மிகக்கொடுமையான பாதுகாப்பு விதிமுறை .  இதுவரை எங்களுக்கு கிடைத்திருக்கும் தகவலின்படி அந்தப் போராட்டத்தில் பஞ்சாப் போலீசார் செயலற்றவர்களாக இருந்திருக்கிறார்கள்.  பிரதமரின் வழித்தடம் முழுவதும் மிகக்குறைவான போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர் என்று உள்துறை துணைச்செயலாளர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த பரபரப்பான சூழலில்,  வல்லபாய் படேல் கூறிய வார்த்தைகளைச் சுட்டிக்காட்டி பிரதமரை மறைமுகமாக விமர்சித்திருந்தார் பஞ்சாப் முதல்வர் பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி. அதில், "ஒருவர் தன்னுடைய அரசியல் பணியை விட தன்னுடைய உயிர்தான் முக்கியம் என்று நினைக்கிறாரோ, அவர் இந்த இந்தியா போன்ற நாட்டில் உயரிய பொறுப்பு எதையும் வகிக்க கூடாது” என்று சர்தார் வல்லபாய் படேல் சொன்ன வார்த்தைகளை பதிவாக போட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் சன்னியை மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த அதிர்ச்சி ஆடியோ வெளியாகி இருக்கிறது.