தீப்பெட்டிக்குள் அடங்கிவிடும் சேலை - தொடரும் நல்லா விஜய் சாதனை

 
o

மன்னர் காலத்தில் மகாராணிக்கு தீப்பெட்டிக்குள் அடங்கிவிடும் சேலையை நெய்து கொடுத்தார் நெசவாளி என்றும்,  மகாராணியை தவிர வேறு யாருக்கும் அப்படி ஒரு அதிசய சேலையை நெய்து கொடுக்கக்கூடாது என்று அந்த நெசவாளியின் கட்டை விரலை வெட்டி விட்டான் என்று கதை உண்டு.   அதேபோல வெள்ளைக்காரர்கள் தங்களது மான்செஸ்டர் துணிகளுக்கு போட்டியாக இந்தியாவில் இருந்த டாக்கா மஸ்லின் துணிகளை ஒழிப்பதற்காக அந்த டாக்கா மஸ்லின் துணிகளை நெய்த நெசவாளர்களின் கட்டை விரல்களை வெட்டி வீசினார்கள் என்பதும் வரலாறு.

ன்

 இந்தநிலையில் தீப்பெட்டிக்குள் அடங்கிவிடும் சேலையை தற்காலத்திலும் நெய்து சாதனை படைத்து வருகிறார் நெசவாளர் நல்லா விஜய்.   தெலுங்கானா மாநிலம் கரீம் நகர் மாவட்டம்  சிரிசில்லாவை  சேர்ந்த நல்லா விஜய்,  இந்த செயலை செய்திருக்கிறார் .

நல்லா விஜய் இந்த சேலையை நெய்வதற்கு அதாவது கைகளால் நெய்வதற்கு ஆறு நாட்கள் ஆனதாக தெரிவித்திருக்கிறார்.  அதே இயந்திரத்தில் நெய்யும்போது இரண்டு நாட்களில் செய்து விடலாம் என்கிறார்.  தெலுங்கானா அமைச்சர்கள் முன்னிலையில் இந்த சேலையை காட்சிப்படுத்தியிருக்கிறார் நெசவாளி நல்லா விஜய்.

ச்ர்ர்

 கடந்த 2011 ஆம் ஆண்டில் அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமா பராக் ஒபாமாவின் இந்திய பயணத்தின் போது அவரது மனைவிக்கு பரிசளிப்பதற்காக  தீப்பெட்டிக்குள் அடங்கும் பட்டுச் சேலையை செய்து கொடுத்திருந்தார்.   அதுமட்டுமல்லாமல் ஒபாமாவுக்கு தீப்பெட்டிக்குள் மடித்து வைக்கும் அளவிலான சால்வையையும் செய்து கொடுத்திருந்தார்.

 60 கிராம் எடை கொண்ட அந்த சேலை 4.5 மீட்டர் நீளமுடையது.   சால்வை 30 கிராம் எடை கொண்டது 2 மீட்டர் நீளம் உடையது .  

மேலும்,  நல்லா விஜய் கடந்த 2017 ஆம் ஆண்டு தீப்பெட்டியில் அடைக்கக் கூடிய 16 முழ சேலை மற்றும் சால்வை ஆகியவற்றை தயாரித்து திருப்பதி மலைக்கு குடும்பத்தினருடன் சென்று ஏழுமலையானுக்கு காணிக்கையாக உண்டியலில் செலுத்தினார்.  

சா

 தனது தந்தையிடமிருந்து இந்த தொழில்நுட்பத்தை தெரிந்து கொண்டதாக சொல்கிறார் நல்லா விஜய்.    பழங்காலத்தில் மஸ்லின் என்ற துணியால் நெய்யப்பட்ட சேலைகள் , வேட்டிகள் தீப்பெட்டியில் அடங்கி விடும்  என்று சொல்வதுண்டு.  அதை நல்லா விஜய் நிரூபிக்கிறார்.  நல்லா  விஜய்யின் விசாரணைகள் தொடர்கின்றன. அவர்களுக்கு வாழ்த்துக்களும் வந்து வந்து குவிகின்றன.