பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் தூக்கிட்டு தற்கொலை

 
s

குற்றப்பிரிவு பெண் இன்ஸ்பெக்டர் ஷில்பா சவான் உடல் தூக்கில் தொங்கி இருந்தபடி சடலமாக மீட்கப்பட்டு இருக்கிறது.  இது தற்கொலையா?  இல்லை கொலையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 நாற்பத்தி எட்டு வயது ஆன சில்பா சவான் புனேவில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்துள்ளார்.   இவர் விஷ்ராந்த வாடியின்  சாந்தி நகர் பகுதியில் வசித்து வந்துள்ளார்.   நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை அவர் பணிக்கு செல்லாததால் அவருடன் பணியில் இருக்கும் சக காவலர்கள் தொடர்பு கொண்டிருக்கிறார்கள்.

sh

 தொலைபேசியை எடுக்காததால்  சாந்தி நகர் பகுதியில் உள்ள சில்பா வீட்டிற்கு சென்று பார்த்திருக்கிறார்கள் . அப்போது மின்விசிறியில் ஒரு உடல் தூக்கில் தொங்கி கொண்டிருந்திருக்கிறது.   பின்னர் அந்த உடல் இன்ஸ்பெக்டர் ஷில்பா சவான்  தான் என்பது உறுதி செய்திருக்கிறார்கள்.  பணிச்சுமை காரணத்தினால் அவர் தற்கொலை செய்துகொண்டாரா என்கிற ரிதியில் செய்தி பரவியது.

 தனது வீட்டின் மின்விசிறியில் தூக்கில் தொங்கியபடி உயிரிழந்ததால் அதை தற்கொலை என்று எடுத்துக்கொள்ள முடியாது.  அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை.  வீட்டில் அவருடன் மகன் வசித்து வருகிறார் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

 இன்ஸ்பெக்டர் ஷில்பா மரணம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது . மரணத்திற்கான காரணத்தை அறிய விசாரணையும் தொடங்கப்பட்டிருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்கள்.

 ஷில்பா சவான் கடந்த  சில வருடங்களுக்கு முன்னர் தான்  புனேவுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.  இந்த நிலையில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது தனக்கு மிகவும் வருத்தமளிப்பதாக தெரிவித்திருக்கிறார் புனே துணை போலீஸ் கமிஷனர் அமிதாப் குப்தா.