புதுமணத்தம்பதிகள் ஆம்புலன்சில் ஊர்வலம் - அமைச்சர்கள் ஆவேசம்

 
an

 புதுமணத்தம்பதிகள் அலங்கரிக்கப்பட்ட தேரில் ஊர்வலம் செல்வது வழக்கம்.  ஆனால், தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்த ஊழியர்கள் ஆம்புலன்சில் பூ மாலைகளால் அலங்கரித்து சைரன் ஒலிக்க ஊர்வலம் சென்றிருக்கிறார்கள்.

 இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றது.  இதையடுத்து அந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.   திருமண தம்பதிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.   கேரளாவின் ஆலப்புழாவில் உள்ள கட்டணம் பகுதியில்தான் இப்படி ஒரு அவலம் நிகழ்ந்திருக்கிறது.

kl

 சைரன் ஒலி எழுப்பியபடி அந்த புதுமண தம்பதிகள் அலங்கரிக்கப்பட்ட ஆம்புலன்சில் ஊர்வலமாக சென்றது குறித்து மோட்டார் வாகன துறை சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.   மோட்டார் வாகன சட்டப்படி ஆம்புலன்ஸ் ஓட்டுனர் தனது உரிமத்தை இழக்கும் அளவுக்கு சென்றிருக்கிறது.

 கேரளாவின் சுகாதாரத் துறை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர்களின் கவனத்திற்கும் கொண்டு இருக்கிறது  இந்த விவகாரம் .  ஆகையால் இந்த விவகாரத்தில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.