ஆன்லைன் விளையாட்டை கட்டுப்படுத்த புதிய சட்டதிருத்தம்

 
o


ஆன்லைன் கேம் விளையாடுவதை  கட்டுப்படுத்த புதிய சட்டதிருத்தம் கொண்டு வரப்படும் என்று அறிவித்திருக்கிறது மத்திய பிரதேச அரசு.

மத்திய பிரேதம் மாநிலம் போபாலில் அண்மையில் ஆன்லைன் கேமுக்கு அடிமையான11 வயது சிறுவன் மன உளைச்சலால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றன.

m

இதனால் சிறுவர்களின் நலன் கருதி ஆன்லைன் கேம் விளையாட்டை கட்டுப்படுத்த  புதிய சட்டம் கொண்டு வரப்படுமென்று அம்மாநில உள்துறை அமைச்சர்  நரோட்டம் மிஸ்ரா தெரிவித்திருக்கிறார். 

ஆன்லை விளையாட்டினால் சிறுவர்கள் உயிரிழப்பதாலும், பெற்றோருக்கும் சமூகத்தினருக்கும் இது பெரும் கவலையை ஏற்படுத்துவதாலும் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.