2 பெண் குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை

 
w

குஜராத் மாநிலத்தில் திகவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் மினக்‌ஷி.  இந்த இளம்பெணுக்கு திருமணமாகி 7 வயது மற்றும் 4 வயதில் மகள்கள் இருந்தனர் மினக்‌ஷிக்கும் அவரது மாமனார் மாமியாருக்கும் மிடையே பல்வேறு விவகாரங்களில் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்து இருக்கிறது.

 இந்த நிலையில் நேற்று அதிகாலையில் தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு,   விறகு எடுத்து வருவதாக கூறி விட்டு  வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்.   விறகு எடுத்து வருவதாக சென்ற மினக்‌ஷி வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை என்பதால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் அவர்களை தேடி இருக்கிறார்கள்.

we

 அப்போது வயல் வெளியில் உள்ள கிணற்றின் அருகில் மினக்‌ஷியின் செல்போன் செருப்பு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கிணற்றை உற்று பார்த்து இருக்கிறார்கள்.  அங்கு மினக்‌ஷியும் 2 குழந்தைகளும்  சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ந்து போயிருக்கிறார்கள்.

 உடனே இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்க அவர்கள் விரைந்து வந்து 3 பேரின் சடலங்களை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.   இந்த விவகாரம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.