அண்ணன் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாத நிலையில் மகேஷ்பாபு

 
mg

பிரபல தெலுங்கு நடிகரும் மகேஷ்பாபுவின் மூத்த சகோதரருமான ரமேஷ் பாபு மாரடைப்பால் உயிரிழந்தார்.   அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

k

 தெலுங்கு திரையுலகில் பழம்பெரும் நடிகர் கிருஷ்ணா.   இவரது மூத்த மகன் கட்டமனேனி ரமேஷ் பாபு(58).  இவரும் நடிகர்.  இவரது சகோதரர் மகேஷ்பாபு தற்போது தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார்.

 நேற்று  ரமேஷ்பாவுக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதால் அவரை உடனடியாக கச்சிபவுலியில்  உள்ள ஏஐஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். அங்கு அவரை காப்பாற்ற முயற்சி செய்தும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.  

ba

 ரமேஷ்பாபுவின் திடீர் மரணம் தெலுங்கு திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.  தெலுங்கு திரையுலக பிரபங்களும் பொதுமக்கள் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் இரங்கலை தெரிவித்து வருகின்றார்கள்.

 மகேஷ்பாபுவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி சிகிச்சை எடுத்து வருவதால்  அவர் தனது சகோதரரின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள முடியாத நிலை இருக்கிறது.

bbn