கணவன் மனைவியாக இருந்தாலும் விருப்பமின்றி உறவு கொள்வது பலாத்காரம் - டெல்லி ஐகோர்ட்

 
d

கணவன் மனைவி என்றாலும்கூட விருப்பம் இன்றி உறவு கொள்வது பலாத்காரம் தான் என்று டெல்லி உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பினை கூறியிருக்கிறது. 

 திருமணம் செய்து கொண்டு கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தாலும் கூட கட்டாயப்படுத்தி பாலியல் உறவில் ஈடுபட செய்வது குற்றச் செயலாக கருதப்பட வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. 

 பாலியல் வன்கொடுமைக்கு எதிரான சட்டத்தில் கணவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் விலக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் இந்திய ஜனநாயக மகளிர் சங்கமும், மற்றும் ஒரு பெண்ணும்  இந்த பொதுநல வழக்கு தொடர்ந்தனர்.

k

 ஜனவரி 7ஆம் தேதியன்று இந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது அப்போது அந்த பெண் சார்பில் வாதாடிய வழக்கறிஞர்,  மனைவியாக இருந்தாலும் கட்டாயப்படுத்தி தாம்பத்தியத்தில் ஈடுபடுவது பாலியல் அத்துமீறல்.    திருமணம் என்ற பேரில் எத்தனையோ பாலியல் வன்கொடுமைகள் நாட்டில் நடைபெற்று வருகிறது.  அவற்றில் எத்தனை புகார்கள் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது என்பதற்கான தகவல்கள் எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

 இதையடுத்து டெல்லி அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,   கட்டாயப்படுத்தி மனைவியை பாலியல் உறவில் ஈடுபட செய்வது கொடுமையான குற்றமாகும் .திருமணமான பெண்ணும் திருமணம் ஆகாத பெண்ணும் ஒவ்வொரு சட்டத்திலும் வெவ்வேறு ஆகவே கருதப்படுகின்றனர் என்று கூறியிருக்கிறார் .

இதையடுத்து வழக்கை ஜனவரி 10ஆம் தேதிக்கு தில்லி உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.   நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது,   கணவன் மனைவியாக இருந்தாலும் விருப்பமின்றி உறவு கொள்வதும் பலாத்காரம் தான்.   முதன்மையான முறையில் தண்டிக்கப்பட வேண்டும்.  இதில் எந்த சந்தேகமும் இருக்கக் கூடாது என்றிருக்கிறார் நீதிபதி.

 அவர் மேலும்,  . பெண்களின் பாலியல் சுயாட்சி உடல் ஒருமைப்பாடு இல்லை என்று சொல்லும் உரிமை ஆகியவற்றை சமரசம் செய்து கொள்ள முடியாது என்றார் நீதிபதி,  அவர் மேலும் தனது தீர்ப்பில் விருப்பமில்லாமல் பாலியல் வன்கொடுமை செய்தால் 10 ஆண்டுகள் சிறை விதிக்க சட்டம் வழி வகுக்கும் போது திருமணமான தம்பதிகளுக்கு இருக்கும் என்பதற்கு களைய வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்.