மன உளைச்சலில் மாடியில் இருந்து குதித்து காவலர் தற்கொலை

 
d

புதுச்சேரி மாநிலத்தில் பயிற்சிப்பள்ளியில் ஆள்சேர்ப்பு பிரிவில் காவலராக பணிபுரிந்து வந்த மகேஷ் பயிற்சிப் பள்ளி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அம்மாநில காவல்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

 புதுச்சேரி மாநிலத்தில் கோரிமேடு பகுதியில் காவலர் பயிற்சி பள்ளி உள்ளது .  இந்த பயிற்சி பள்ளியில் ஆள்சேர்ப்பு பிரிவில் காவலராக பணிபுரிந்து வந்தவர் மகேஷ். 36 வயதான மகேஷ் கடந்த சில மாதங்களாகவே மன அழுத்தத்தில் இருந்து வந்திருக்கிறார்.   இதனால் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக அவர் ஜிப்மர்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இருக்கிறார்.

m

 இந்த நிலையில் புதுச்சேரியில் விரைவில் காலியாக இருக்கும் காவலர்களுக்கான பணியிடங்களை ஆட்சேர்ப்பு மூலம் நிரப்பும் பணி நடைபெற இருப்பதால் இதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.    இதனால் மகேஷ் சமீபகாலமாக மிகவும் மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது.  

இன்றைக்கு காலையில் காவலர் பயிற்சி பள்ளிக்கு வழக்கம் போலவே பணிக்கு வந்த மகேஷ் இரண்டாவது மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்து இருக்கிறார்.   இதில் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து உயிரிழந்திருக்கிறார்.   இந்த கோர சம்பவத்தை கண்ட காவலர்கள் அவரது உடலை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

 மகேஷ் தற்கொலை செய்த இடத்திற்கு வந்த காவல் கண்காணிப்பாளர்கள் மகேஷ் கொலை செய்ததற்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.   தற்கொலை செய்து கொண்ட மகேஷ்க்கு மனைவியும் நான்காம் வகுப்பு படிக்கும் ஸ்ரீஹரி என்ற மகனும் உள்ளனர்.

 பயிற்சி பள்ளியில் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் புதுச்சேரியில் காவல்துறையில் பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியிருக்கிறது.