முகத்தில் ஆசிட் வீசிய காதலி - பார்வை இழந்த காதலன்

 
a

தன்னை காதலித்துவிட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய முயன்றதால் காதலன் மீது ஆசிட் வீசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் இளம்பெண்.   ஆசிட் வீசியதில் அந்த இளைஞர் கண் பார்வை இழந்திருக்கிறார் .  கேரளாவில் நடந்து இருக்கிறது இந்த சம்பவம்.

ac

  திருவனந்தபுரம் மாவட்டத்தில் பூஜாப்புரா இப்பகுதியில் வாழ்ந்து வந்தவர் அருண்குமார்.   27 வயதான இந்த இளைஞர் ஷீபா என்ற 35 வயது பெண்ணை காதலித்து வந்துள்ளார்.   சமூக வலைத்தளம் மூலம் இருவரும் முதலில் நட்பாக பழகி பின்னர் காதலித்து வந்துள்ளனர்.

 இந்த நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஷீபா கேட்டு வந்த நிலையில் வேறொரு பெண்ணை அருண்குமார் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருக்கிறார்.   இதை அறிந்த ஷீபா கடந்த 16ஆம் தேதியன்று இடுக்கி மாவட்டத்தில் அடிமாலி பகுதியில் இருக்கும்  செயின்ட் ஆண்டனி தேவாலயம் அருகே அருண்குமாரை அழைத்து பேசியிருக்கிறார்.

c

 அப்போது,  தான் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக உறுதியாக சொல்லியிருக்கிறார்.   இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் தான் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து  அருண்குமார் முகத்தில் வீசியுள்ளார்.   இதில் அருண்குமார் துடிதுடித்து அலறூகிறார்.  திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் அருண்குமார். அவரது ஒரு கண் பார்வை பறிபோயிருக்கிறது.

 இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் சம்பவம் நடந்த இடத்தில் சிசிடிவி காட்சிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.   அதில் அருண்மார் மீது ஆசிட் வீசுவது பதிவாகியிருக்கிறது.   இதையடுத்து ஷீபா கைது செய்யப்பட்டுள்ளார்.

 காதலன் மீது ஆசிட் வீசும்  சிசிடிவி காட்சிகள் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.