மும்பையில் கடத்தப்பட்ட பெண் குழந்தை சென்னையில் மீட்பு

 
ம்ம்

மும்பையில் கடத்தப்பட்ட 4 மாத குழந்தை 3 நாட்களுக்கு பின்னர் சென்னையில் மீட்கப்பட்டு இருக்கிறது. 

 மும்பையை சேர்ந்த அன்வாரி  அப்துல் ஷேன்,  தனது நான்கு மாத பெண் குழந்தையை காணவில்லை என்று கடந்த 3 நாட்களுக்கு முன்பாக போலீசில் புகார் அளித்திருந்தார்.   பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் பார்த்துவிட்டு குழந்தை எங்கேயும் கிடைக்கவில்லை என்ற பின்னர் தான் போலீசில் புகார் அளித்ததாக அவர் தெரிவித்திருந்தார்.  

ப்ன்

 குழந்தை காணாமல் போன அதே தினத்தில் அவருடன் திருமணமாகாமல் சேர்ந்து வாழ்ந்து வந்த இப்ராஹிம் ஷேக் என்பவரையும் காணவில்லை என்பதால் போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் எழுந்தது.   இதையடுத்து இப்ராஹிம் சேஷ் தொலைபேசி எண்ணை வைத்து அவரை பிடித்து விசாரணை செய்ததில் உண்மை வெளியே வந்தது.

 குழந்தையை கடத்தி தமிழ்நாட்டிலுள்ள ஒரு தம்பதிக்கு 4.8 லட்சம் ரூபாய்க்கு விற்று விட்டதாக கூறியிருக்கிறார்.   குழந்தையை கடத்தி விற்பனை செய்தது தொடர்பாக ஆறு பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.    இதன் பின்னர் மும்பை போலீசார் தமிழ்நாட்டிற்கு வந்தனர்.

 தமிழ்நாட்டில் அந்த குழந்தையை வாங்கிய தம்பதிகள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.    பின்னர் மும்பையில் இருந்து கடத்தி வரப்பட்ட அந்த குழந்தையை பத்திரமாக மீட்டனர்.  

 குழந்தையை வாங்கிய தம்பியையும் கைது செய்து விசாரணைக்காக மும்பைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள்  போலீசார். குழந்தையின் தந்தை தான் என்று தெரிவித்திருந்தாலும் இப்ராஹிமை  டிஎன்ஏ சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்திருக்கின்றார்கள்.