பாச குரங்குக்கு செய்த இறுதி மரியாதை - கிராமத்தினர் மீது வழக்கு

 
ஹ்

பாச குரங்குக்கு இறுதி ஊர்வலம் நடத்தி இறுதிச்சடங்கு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த குரங்கிற்கு காரியம் செய்து ஊர் மக்களுக்கு விருந்து வைத்ததாகவும் காவல்துறை வழக்குப் பதிவு செய்திருக்கிறது.   கொரோனா கட்டுப்பாடுகளை மீறி நடந்ததாகச் சொல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர்.

 மத்திய பிரதேச மாநிலத்தில் ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள தளுபுரா கிராமத்தில் அந்த குரங்கு அப்பகுதி மக்களுடன் பாசமாக இருந்து வந்திருக்கிறது.  இந்நிலையில் கடந்த டிசம்பர் 29ம் தேதியன்று உடல்நிலை சரியில்லாமல் அக்குரங்கு உயிரிழந்து இருக்கிறது.

க்

 இதையடுத்து அப்பகுதி மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு இறுதி சடங்கை நடத்தி இருக்கிறார்கள் .  அதன் பின்னர் ஊர் மக்கள் ஒன்று கூடி பணம் வசூல் செய்து ஜனவரி 10ஆம் தேதியன்று காரியம் நடத்தி ஊர்மக்கள் 1500 பேருக்கு பெரிய பந்தல் போட்டு விருந்து வைத்திருக்கிறார்கள்.

 இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.  இந்த நிலையில்  கொரோனா கட்டுப்பாடுகளை மீறி கூட்டம் கூடி விருந்துக்கு ஏற்பாடு செய்த இருவர் மீது கிராமத்தினர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் போலீசார்.