ஹாஸ்டலில் தங்கி படிக்க பயம் - ஆற்றில் குதித்து கல்லூரி மாணவி தற்கொலை

 
h

ஹாஸ்டலில் தங்கி படிக்க வேண்டும் என்று சொன்னதால் அங்கேயே சென்று தங்கி  படிக்க பயந்த என்ஜினீயரிங் மாணவி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காளகஸ்தி பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

 திருப்பதி அடுத்த காளகஸ்தி தொட்டம் பேடு மண்டலம் அருகே உள்ளது காரக்கொல்லு  பகுதி.  இப்பகுதியில் வசித்து வரும் வெங்கடேஷ் மகள் சைத்தன்யா.    இவர் நெல்லூரில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்திருக்கிறார்.    காளகஸ்தியில் இருந்து தினமும் நெல்லூர் சென்று படித்து வருவதில் சிரமம் இருந்ததால் கல்லூரி ஹாஸ்டலில் தங்கி படிக்குமாறு பெற்றோர் சொல்லி இருக்கிறார்கள்.  ஆனால் ஹாஸ்டலில் தங்கி படிக்க விருப்பம் இல்லாதத சைதன்யா வீட்டிலிருந்து சென்று படித்து வருவதாக பெற்றோரிடம் சொல்லியிருக்கிறார்.

h

 ஆனால் சைதன்யாவின் பெற்றோர் இந்த ஒரு வருடம் மட்டும் ஹாஸ்டலில் தங்கி படிக்குமாறு அவரை கட்டாயப்படுத்தி இருக்கிறார்கள்.   பின்னர் வேறு வழியில்லாமல் ஹாஸ்டலில் சென்று படித்து வந்த சைதன்யா ஒரு வாரத்திற்குப் பின்னர் புத்தாண்டிற்கு விடுமுறைக்கு வீட்டிற்கு வந்திருக்கிறார்.  அப்போது பெற்றோருடன் சேர்ந்து காளகஸ்தி சிவன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்திருக்கிறார். 

 மீண்டும் ஹாஸ்டலுக்கு செல்ல வேண்டுமே என்பதை நினைத்த சைத்தன்யா விரக்தியில் தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்திருக்கிறார்.   அதன்படி காளகஸ்தி அருகே செல்லும் தெலுங்கு கங்கை திட்டம் ஆற்றங்கரைக்குச் சென்று ஆற்றங்கரையில்  செல்போனை வைத்து விட்டு ஆற்றுக்குள் குதித்திருக்கிறார்.  தண்ணீரில் மூழ்கி விட்டார்.

 சில மணி நேரங்கள் கழித்து அவ்வழியாக வந்த ஒருவர் கரையில் செல்போன் இருந்ததை பார்த்து விட்டு அதிலிருந்து தொடர்பு கொள்ள பெற்றோர் எடுத்துப் பேசி இருக்கிறார்கள்.  அவர்களிடம் விவரத்தை சொல்ல பெற்றோர்கள் போலீசாரிடம் தகவல் தெரிவித்திருக்கிறார்கள்.  பின்னர் போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் ஆற்றில் மாணவியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

 நேற்று காலையில் தொட்டம் பேடு கரையோரம் சைத்தன்யாவின் உடல் ஒதுங்கி இருந்திருக்கிறது.  அவரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  அவர் தற்கொலை செய்து கொண்டாரா இல்லை வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்