பாலியல் வழக்கில் அர்ஜுன் குற்றமற்றவர் - விரைவில் விடுவிக்கப்படுகிறார்

 
அர்

 நடிகர் அர்ஜுன் குற்றமற்றவர் என்று போலீசார் தாக்கல் செய்த அறிக்கையில் நீதிமன்றம் அங்கீகரித்திருக்கிறது.   இதையடுத்து நடிகை ஸ்ருதி ஹரிஹரன் தொடர்ந்த பாலியல் வழக்கில் இருந்து அர்ஜுன் விரைவில் அறிவிக்கப்படுவார் என்று தெரிகிறது.

பிரபல நடிகர் அர்ஜுன்,  ‘ நிபுணன்’ என்கிற படத்தில் நடித்திருந்தார்.   இந்தப் படம் கன்னடத்தில் விஸ்மயா என்ற பெயரில் வெளியாகியிருந்தது.  நிபுணன் படத்தின் படப்பிடிப்பின்போது அர்ஜுன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நிபுணன் படத்தின் நாயகி ஸ்ருதி ஹரிஹரன் அர்ஜூன் மீது பரபரப்பு புகார் தெரிவித்திருந்தார். 

ச்ரு

 கடந்த 2018 ஆம் ஆண்டில் மீ டூ இயக்கம் மூலமாக மீடூ  ஹேர் ஹேஸ்டேக் பிரபலமாக இருப்பதால் அந்த சமயத்தில் ஸ்ருதி ஹரிஹரன் இவ்வாறு தெரிவித்திருந்தார். மேலும் பெங்களூரு கப்பன் பார்க் போலீஸ் நிலையத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஸ்ருதி ஹரிஹரன் புகார் அளித்துள்ளார்.  இதுகுறித்து கப்பன் பார்க்கில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

 கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இந்த வழக்கில் போலீசார் நடத்திய விசாரணையில் நடிகை சுருதி ஹரிஹரனுக்கு அர்ஜுன் பாலியல் தொல்லை கொடுத்ததாக எந்த சாட்சியும் ஆதாரங்களும் போலீசாருக்கு கிடைக்கவில்லை .  இதையடுத்து அர்ஜுன் குற்றமற்றவர் என்று சொல்லி பெங்களூரில் எட்டாவது மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் கடந்த 2021-ஆம் ஆண்டில் கப்பன் பார்க் போலீசார் பி அறிக்கையைத் தாக்கல் செய்திருக்கிறார்கள். 

 இதன் பின்னர் போலீஸ் தாக்கல் செய்துள்ள பி அறிக்கைக்கு ஆட்சேபனை தெரிவிக்க நடிகை ஸ்ருதி ஹரிகரன் கோர்ட் உத்தரவிட்டிருந்தது.  இது தொடர்பான வழக்கு விசாரணை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நேற்று நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.  

 ஆனால் நடிகரின் அர்ஜுன் மீது பாலியல் புகார் அளித்திருந்த நடிகை ஸ்ருதி ஹரிகரன்  ஆஜராகவில்லை.   ஆட்சேபனை தெரிவித்து மனு எதுவும் தாக்கல் செய்யவில்லை.    இதையடுத்து நடிகை ஸ்ருதி ஹரிஹரன் தொடர்ந்த பாலியல் வழக்கில் அர்ஜுன்  குற்றமற்றவர் என்றும் அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்திருக்கிறார்கள் .    போலீசாரின் பி அறிக்கையையும் நீதிபதிகள் அங்கீகரிக்கிறார்கள்.  இதனால்  இந்த வழக்கிலிருந்து அர்ஜூன் விரைவில் விடுவிக்கப்படுவார் என்று நீதிமன்றம் வட்டாரம் தெரிவித்திருக்கிறது.