நடிகரின் மனைவி தற்கொலை - பிரபல வில்லன் நடிகரின் மனைவி கைது

 
pd

 வரதட்சனை கொடுமையால் நடிகரின் மனைவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் பிரபல வில்லன் நடிகரின் மனைவி கைது செய்யப்பட்டிருக்கிறார்.

 மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் முன்னணி வில்லன் நடிகராக இருந்தவர் ராஜன் பி தேவ் . தமிழில்  சூரியன் படத்தின் மூலம் மிகப் பிரபலமான இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக  காலமாகிவிட்டார்.    ராஜன் பி தேவ்க்கு சாந்தம்மா என்கிற மனைவியும் உன்னி என்ற மகனும் உள்ளனர்.  இவர் ஒரு சில மலையாளப் படங்களில் நடித்திருக்கிறார்.  இவருக்கும் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரியங்கா என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றுள்ளது.

pr

 திருமணத்தின்போது 100 பவுன் நகையும் நட்டும் சீர்வரிசைகள் வரதட்சன யாக கொடுக்கப்பட்டிருக்கிறது.    திருமணத்திற்குப் பின்னர் இத்தனையும் போதாதென்று மேற்கொண்டு வரதட்சணை  வேண்டும் என்று பிரியங்காவிடம் கேட்டு கொடுமை படுத்தவும் ஒரு கட்டத்திற்கு மேல் மாமியார் கணவரின் கொடுமை தாங்க முடியாமல் பெற்றோர் வீட்டிற்கு சென்றிருக்கிறார்.   அப்படியாவது பிரச்சினை தீர்ந்துவிடும் என்று பார்த்தால் வரதட்சணை கேட்பது நிறுத்தவில்லையாம்.

 தொடர்ந்து கேட்டு வற்புறுத்திக் கொண்டே இருந்திருக்கிறார்கள்.   இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பிரியங்கா தனது சாவுக்கு காரணம் சாந்தம்மாவும் உன்னியும்தான் காரணம் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.   இது தெரிந்ததும் உன்னியும் சாந்தம்மாவும் முன்ஜாமீன் கேட்டு கேரள உயர்நீதிமன்றத்தில்  மனு போட்டிருக்கிறார்கள்.

 இந்த முன்ஜாமின் மனு மீதான விசாரணையின் போது நெடுமங்காடு டிஎஸ்பி முன்பு ஆஜராகி கையெழுத்திட உத்தரவிட்டுள்ளார் நீதிபதி.   இதையடுத்து நேற்று கையெழுத்திட வந்த அவரை காவல்துறையினர் கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.