கழிவறையில் திடீர் பிரசவம்! டாய்லெட்டில் சிக்கிக்கொண்ட குழந்தையை மீட்ட தீயணைப்பு படை

 
ch

 கர்ப்பிணிப் பெண் கழிவறையை பயன்படுத்தும் போது திடீரென்று குழந்தையை பெற்றெடுத்து இருக்கிறார்.   அந்த குழந்தை டாய்லெட்டில் சிக்கியிருக்கிறது.  தீயணைப்பு படையினரால் அக்குழந்தை உயிருடன் மீட்கப்பட்டிருக்கிறது.  குஜராத் மாநிலத்தில் அகமதாபாத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.

by

 அகமதாபாத்தில் பெண்கள் பாதுகாப்பு மேம்பாட்டு இல்லத்தில் வசித்து வருகிறார் அந்தப் பெண்.   நிறைமாத கர்ப்பிணிப்பெண் அவர் திடீரென்று வயிற்று வலி ஏற்பட டாய்லெட் சென்று வருகிறேன் என்று சொல்லிவிட்டு கழிவறைக்கு சென்று இருக்கிறார்.   அங்கே திடீரென்று அவருக்கு பிரசவம் ஆகி இருக்கிறது.  

 பிறந்த குழந்தை டாய்லெட்டில் சிக்கியிருக்கிறது.   மனநிலை சரியில்லாத அந்தப்பெண்ணுக்கு கழிவறையில் திடீரென்று பிரசவம் ஆனதால் அந்தப் பெண்ணுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை .   பிரசவத்தில் பிறந்த குழந்தை டாய்லெட்டில் சிக்கிக் கொண்ட தகவல் அறிந்ததும்,  பாதுகாப்பு இல்லத்தைச் சேர்ந்தவர்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள்.  

தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு  விரைந்து வந்து  போராடி குழந்தையின் உயிரை காப்பாற்றி இருக்கிறார்கள்.