மீண்டும் அதிகரிக்கும் கொரோனா : 3ஆம் அலையில் சிக்கியதா இந்தியா?

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா : 3ஆம் அலையில் சிக்கியதா இந்தியா?

இந்தியாவில் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 37,875 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா : 3ஆம் அலையில் சிக்கியதா இந்தியா?

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 37,875 பேருக்கு கொரோனா உறுதியானதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,30,96,718 ஆக அதிகரித்துள்ளது. நேற்று தினசரி கொரோனா 31,222 ஆக இருந்த நிலையில் இன்று தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 369 பேர் பலியாகியுள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,41,411 ஆக அதிகரித்துள்ளது.

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா : 3ஆம் அலையில் சிக்கியதா இந்தியா?

கடந்த 24 மணிநேரத்தில் 39,114 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவிலிருந்து 3,22,64,051 குணமாகியுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது 3,91,256 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 78,47,625 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில் இதுவரை 70,75,43,018 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.