“அடித்தட்டு மக்களின் வாழ்வில் வளம்சேர்க்கும் தீர்ப்பினை மனதார வரவேற்கிறேன்” : ஓபிஎஸ் ட்வீட்!

“அடித்தட்டு மக்களின் வாழ்வில் வளம்சேர்க்கும் தீர்ப்பினை மனதார வரவேற்கிறேன்” : ஓபிஎஸ் ட்வீட்!

தாழ்த்தப் பட்டோரின் 18 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் 3 விழுக்காடு அருந்ததியர் மக்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்குவதாக 2009 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த திமுக அரசு அறிவித்தது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

“அடித்தட்டு மக்களின் வாழ்வில் வளம்சேர்க்கும் தீர்ப்பினை மனதார வரவேற்கிறேன்” : ஓபிஎஸ் ட்வீட்!

இந்த வழக்கை விசாரித்து வந்த தலைமை நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, அருந்ததியினருக்கு உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இதற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் , வைகோ உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இதுகுறித்து துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், “பட்டியலினத்தவருக்கான இட ஒதுக்கீட்டில் அருந்ததியினருக்கு உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அடித்தட்டு மக்களின் வாழ்வில் வளம்சேர்க்க வழிவகுத்துள்ள உச்ச நீதிமன்றத்தின் இத்தீர்ப்பினை மனதார வரவேற்கிறேன்” என்று கூறியுள்ளார்.