“கலைஞரின் முடிவுக்கான வெற்றி இது” :உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு!

 

“கலைஞரின் முடிவுக்கான வெற்றி இது” :உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு!

கடந்த 2009 ஆம் ஆண்டு இட ஒதுக்கீடு முறையில் தாழ்த்தப் பட்டோரின் 18 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் 3 விழுக்காடு அருந்ததியர் மக்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்குவதாக தமிழக அரசு அறிவித்தது. இந்த உள் ஒதுக்கீட்டை எதிர்த்து புதிய தமிழகம் கிருஷ்ணசாமி உள்ளிட்ட பலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

“கலைஞரின் முடிவுக்கான வெற்றி இது” :உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு!


இதற்கான விசாரணை முடிவடைந்து விட்ட நிலையில், நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது. அதில், “பட்டியலினத்தவர்கான இட ஒதுக்கீட்டில் அருந்ததியினருக்கு உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று தெரிவித்துள்ள நீதிமன்றம் பட்டியலின பிரிவினரிடையே உள்ஒதுக்கீடு வழங்கும் வழக்கை 7 நீதிபதிகள் அமர்வுக்கு அருண் மிஸ்ரா அமர்வு மாற்றியது. வழக்கை விரைவாக விசாரிக்க 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி உள்ளதாக அருண் மிஸ்ரா அமர்வு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் முக ஸ்டாலின், “SC -18%, ST – தனியாக 1% என பட்டியலின-பழங்குடியினர் இடஒதுக்கீட்டை 19% ஆக உயர்த்தியது தி.மு.க;
அருந்ததியினர் சமூகத்திற்கு 3% உள் இடஒதுக்கீடு தந்ததும் கலைஞர் அரசு. இன்று உச்சநீதிமன்றம் அதனை உறுதிப்படுத்தியிருக்கிறது. கலைஞரின் முடிவுக்கான வெற்றி இது. அக மகிழ்வோடு வரவேற்கிறேன்!” என்று கூறியுள்ளார்.