சவரனுக்கு ரூ.1832 குறைந்தது தங்க விலை : விலை பட்டியல் இதோ!

 

சவரனுக்கு ரூ.1832 குறைந்தது தங்க விலை : விலை பட்டியல் இதோ!

தங்க விலை ஏறுமுகத்தில் இருந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதும் எல்லா நாடுகளும் பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்பை சந்தித்தது. இதனால் தங்கத்தின் வரத்து குறைந்து விலை மேலும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

சவரனுக்கு ரூ.1832 குறைந்தது தங்க விலை : விலை பட்டியல் இதோ!

ஒரு சில நாட்கள் தங்க விலை குறைந்து வந்தாலும், கொரோனா பொதுமுடக்க நாட்களில் இதுவரை இல்லாத ஏற்றத்தை கண்டது. கடந்த 15 நாட்களுக்கு மேலாக அதிரடியாக உயர்ந்து வந்த தங்க விலை கடந்த 3 நாட்களாக குறைந்து வருகிறது.

சவரனுக்கு ரூ.1832 குறைந்தது தங்க விலை : விலை பட்டியல் இதோ!

இன்றைய நிலவரத்தின் படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1832 குறைந்து ரூ.40,104 க்கு விற்பனை
விற்கப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.229 குறைந்து ரூ.5,013க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 4 நாட்களில் தங்கத்தின் விலை ரூ. 2400 வரை குறைந்துள்ளது.