வரலாறு காணாத விலை உயர்வு”.. ரூ.43 ஆயிரத்தை எட்டியது தங்க விலை!

 

வரலாறு காணாத விலை உயர்வு”.. ரூ.43 ஆயிரத்தை எட்டியது தங்க விலை!

இந்த ஆண்டு தொடக்கத்தில் மாறி மாறி ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்த தங்க விலை 30 ஆயிரத்துக்குள்ளேயே நீடித்து வந்தது. ஆனால் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய உடன் தங்கத்தின் வரத்து குறைந்ததாலும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டதாலும் தங்க விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக கடந்த மாதத்தில் இருந்து தங்க விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரூ.40 ஆயிரத்தை எட்டிய தங்க விலை இன்று வரலாறு காணாத அளவுக்கு ஏற்றத்தை சந்தித்துள்ளது. இன்னும் தங்க விலை உயரும் என்று கூறப்படுவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தங்க விலை மட்டுமில்லாது வெள்ளி விலையும் உயர்ந்து கொண்டே வருகிறது.

வரலாறு காணாத விலை உயர்வு”.. ரூ.43 ஆயிரத்தை எட்டியது தங்க விலை!

இன்றைய நிலவரத்தின் படி ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.46 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,420க்கு விற்பனையாகிறது. அதன் படி சவரனுக்கு ரூ.366 உயர்ந்து ஒரு சவரன் தங்க விலை ரூ.43,360க்கு விற்பனையாகிறது. மேலும் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2.20 அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.83.80க்கு விற்பனை செய்யப்படுகிறது.