மகளிருக்கு பஸ்சில் இலவச பயணம் : ஆண்களுக்கு அதிக கட்டணம் : ஓபிஎஸ் கண்டனம்!

 

மகளிருக்கு பஸ்சில் இலவச பயணம் :  ஆண்களுக்கு அதிக கட்டணம் : ஓபிஎஸ் கண்டனம்!

அரசு பேருந்துகளில் ஆண்களுக்கு அதிக கட்டணம் வசூலிப்பதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மகளிருக்கு பஸ்சில் இலவச பயணம் :  ஆண்களுக்கு அதிக கட்டணம் : ஓபிஎஸ் கண்டனம்!

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியை பிடித்தது திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பல்வேறு நலத்திட்டங்களை முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்தார். அதில் ஒன்று மகளிருக்கு நகரப்பகுதிகளில் இலவச பயணம் என்பதுதான். மகளிருக்கு மட்டுமல்லாது மாற்றுத்திறனாளிகள் ,திருநங்கைகள் என அனைவருக்கும் நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த அறிவிப்பு மகளிர் மற்றும் திருநங்கைகள் மாற்றுத்திறனாளிகள் இடையே வரவேற்பை பெற்றது. இதனால் லட்சக்கணக்கான பெண்களும், திருநங்கைகளும், மாற்றுத்திறனாளிகளும் பயனடைந்து வருகின்றனர்.இந்த சூழலில் ஆண்களிடமிருந்து பேரூந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளன.

மகளிருக்கு பஸ்சில் இலவச பயணம் :  ஆண்களுக்கு அதிக கட்டணம் : ஓபிஎஸ் கண்டனம்!

இந்நிலையில் மகளிருக்கு பஸ்சில் இலவச பயணம் என கூறிவிட்டு ஆண்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதா? என்று ஓபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார். குறைந்தபட்சம் கட்டணமாக 5 ரூபாய் என்றிருந்த நிலையில் தற்போது ரூபாய் 10 வசூலிப்பதா?மகளிருக்கான இலவச பயணத்தால் ஏற்படும் இழப்பை ஆண்கள் தலையில் சுமத்துவதைத் தடுத்து நிறுத்துங்கள். இந்த கட்டண வசூல் அரசுக்கும், ஆட்சியாளர்களுக்கும் தெரிந்து நடக்கிறதா ? தெரியாமல் நடக்கிறதா ? புதிய யுத்திகளை அரசு போக்குவரத்து கழகங்கள் கடைப்பிடிப்பது அரசாணைக்கு எதிரான செயல் திட்டம் என்றும் முதல்வர் உடனடியாக இதில் தலையிட்டு ஆண்கள் தலையில் சுமத்தப்படும் இழப்பை தடுக்க வேண்டும் ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.